ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

தீ வைத்து கொண்டாடியவர்களை திரும்பித் தாக்கிய ராவணன்... தசராவில் நடந்த சம்பவம் - வைரல் வீடியோ

தீ வைத்து கொண்டாடியவர்களை திரும்பித் தாக்கிய ராவணன்... தசராவில் நடந்த சம்பவம் - வைரல் வீடியோ

கூட்டத்தைத் தாக்கிய ராவணனின் தீ பொறிகள்

கூட்டத்தைத் தாக்கிய ராவணனின் தீ பொறிகள்

தசரா கொண்டாட்டத்தின் போது ராவணன் உருவ பொம்மைக்கு வைக்கப்பட்ட தீ, திரும்பி தாக்கிய சம்பவத்தில் காணொளி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Uttar Pradesh, India

  உத்தரப்பிரதேசத்தில் தசரா கொண்டாட்டத்தின் போது ராவணன் உருவ பொம்மைக்கு வைக்கப்பட்ட தீ, கொண்டாட்டத்திற்குக் கூடியிருந்த கூட்டத்தைத் திரும்பித் தாக்கியது பரபரப்பரப்பு ஏற்படுத்தியுள்ளது. அந்த விபத்தின் காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

  உத்தரப்பிரதேச மாநிலத்தில் முசாபர்நகர் பகுதியில் புதன்கிழமை அன்று தசரா பண்டிகை கொண்டாட்டமாக வழக்கமாக வைப்பது போல் ராவணனுக்குத் தீ வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியைக் காணப் பெரிய கூட்டமே அங்குக் கூடியிருந்தது.

  அப்போது தீயினால் எறிந்த ராவணனின் உருவ பொம்மையில் இருந்து தீப்பொறிகள் கூட்டத்தில் உள்ளவர்களைத் தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தின் காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

  முசாபர்நகர் அரசு கல்லூரியில் மைதானத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த காணொளியில் ராவணன் உருவச் பொம்மையிலிருந்து வெடிகள் கூட்டத்தின் மேல் வீசப்படுவது தெரிகிறது. மேலும் அதில் மக்கள் மட்டும் இல்லாமல் பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்களும் அங்கும் இங்கும் அலைந்து

  ஓடுகின்றனர்.

  Also Read : கேரளாவில் பள்ளி சுற்றுலா பேருந்து விபத்து.. மாணவர்கள் உள்பட 9 பேர் பலியான சோகம்

  அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் ஒரு காளை மாடு கூட்டத்தில் புகுந்து பெரும் பரபரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து யமுனா நகர் காவல்துறை தெரிவிக்கையில், உருவச் சிலையில் இருந்து தீயுடன் வெடி சிதறியதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளனர். தசரா பண்டிகைப்போது ஏற்பட்ட இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பரப்பு ஏற்பட்டது.

  Published by:Janvi
  First published:

  Tags: Accident, Dussehra celebration, Uttar pradesh, Vijayadashmi