• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • சாக்லேட் திமிங்கலைத்தை சாப்பிடுவீர்களா? வைரலாகும் 90 பவுண்டு எடையுள்ள சாக்லேட் திமிங்கலம்!

சாக்லேட் திமிங்கலைத்தை சாப்பிடுவீர்களா? வைரலாகும் 90 பவுண்டு எடையுள்ள சாக்லேட் திமிங்கலம்!

90 பவுண்டு எடையுள்ள சாக்லேட் திமிங்கலம்

90 பவுண்டு எடையுள்ள சாக்லேட் திமிங்கலம்

ஒவ்வொரு இனிப்பும் எப்படியெல்லாம் தயாரித்தார் என்பதை ஒவ்வொரு நாளாக பதிவு செய்து, ஒன்றிணைத்து பகிர்வார்.

  • Share this:
சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று கேட்டால் நீங்கள் பட்டியிலிட மாட்டீர்களா என்ன? சாக்லேட் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது, ஆன்டிஆக்சிடன்ட்நிறைந்தது, மன அழுத்தத்தை குறைக்கும், மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இவையெல்லாம் மருத்துவ ரீதியாக, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை.

சாக்லேட் பிடிக்காதவர்கள் என்று யாராவது இருக்கிறார்களா என்று தேட வேண்டும். அந்த அளவுக்கு உலகமே சாக்லேட்டை விரும்புகிறது. சாக்லேட்டில் பல வகைகள் உள்ளன. பல்வேறு வடிவங்களில், தோற்றங்களில் சாக்லேட்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், உண்மையாகவே, ஒரு திமிங்கலம் போல காட்சியளிக்கும் சாக்லேட்டை பார்த்தால் உங்களுக்கு சாப்பிடத் தோன்றுமா?

அமுரி குய்ச்சான் என்ற பேஸ்ட்ரி செஃப் சமீபத்தில், ஒரு திமிங்கலத்தால் இன்ஸ்டாகிராமையே கலங்கடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள அவரின் தயாரிப்புக்கு ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஆயிரக்கணக்கான வியூக்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அமுரி குய்ச்சான், தற்போது லாஸ் வேகாசில் வசித்து வருகிறார். நடிகர் நடிகைகளுக்கு இருப்பது போலவே, இவருக்கும் இன்ஸ்டாகிராமில் 4.2 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் அவ்வபோது இவர் தயாரித்த இனிப்பு வகைகளை பகிர்வது வழக்கம்.

ஒவ்வொரு இனிப்பும் எப்படியெல்லாம் தயாரித்தார் என்பதை ஒவ்வொரு நாளாக பதிவு செய்து, ஒன்றிணைத்து பகிர்வார். இனிப்பு வகைகளில் என்ன இருந்திடப் போகிறது, அதே மாவு, சர்க்கரை, முட்டை, உணவு வண்ணங்கள், மோல்டுகள் தானே என்று நினைத்தால், குய்ச்சானின் அசல் திமிங்கலம் போன்ற சாக்லேட்டை பார்த்து அசந்து விடுவீர்கள். 90 பவுண்டுகள் எடையுள்ள ஒரு திமிங்கலத்தை இவர் செய்துள்ளார்.

Also read... ஊழியர்களுக்கு தலா 10,000 டாலர், ஃப்ளைட் டிக்கெட்ஸ் - அசத்தல் போனஸை அறிவித்த முதலாளி!

அடிப்படையில் இருந்து இந்த சாக்லேட் திமிங்கலம் எப்படி செய்யப்பட்டது என்ற வீடியோக்களை ஒன்றாக இணைத்து, ஃபாஸ்ட்-ஃபார்வர்ட் வெர்ஷனில் வெளியிட்டுள்ளார். “மில்க் மற்றும் டார்க் சாக்லேட் பயன்படுத்தி, நான்கு நாட்களில் இந்த திமிங்கலத்தை செய்து முடித்தேன்.” என்று குயச்சான் கூறினார். சாக்லேட் திமிங்கலத்தின் தோல் தான் அதன் சிறப்பம்சம். அப்படியே நிஜமான திமிங்கலத்தைப் பார்ப்பது போலவே அத்தனை நேர்த்தியாக, துல்லியமான நிறங்களைப் பயன்படுத்தி வடிவமைத்துள்ளார். அவருடைய சாக்லெட் திமிங்கலத்தின் வீடியோ இங்கே. 
View this post on Instagram

 

A post shared by Amaury Guichon (@amauryguichon)


இவர் பகிர்ந்த வீடியோ பதிவின் கமென்ட் பிரிவில், எக்கச்சக்கமான கமெண்ட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

“பார்த்தவுடன் சிலையாகி விட்டேன்”, “இன்ஜினியரிங் வேலை இது” , “நீங்கள் அடுத்து டைட்டானிக் தயார் செய்ய வேண்டும்” என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்,. இதுவரை இந்த வீடியோவிற்கு 2.84 லைக்குகள் கிடைத்துள்ளன. நெட்டிசன்களைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? இந்த நம்பமுடியாத சாக்லேட் திமிங்கலத்துக்கு லைக்குகளை வாரிக் குவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

First published: