கரப்பான்பூச்சிக்கு சிசேரியன் முறையில் பிரசவம் பார்த்த மருத்துவர்..!- வீடியோ

இயற்கையாகப் பிரசவிப்பதில் அந்தக் கரப்பான்பூச்சி சிக்கலைச் சந்தித்துள்ளது. இதனால் உடனடியாக மூன்று விதமான மயக்க மருந்துகள் தரப்பட்டன.

கரப்பான்பூச்சிக்கு சிசேரியன் முறையில் பிரசவம் பார்த்த மருத்துவர்..!- வீடியோ
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: December 28, 2019, 7:30 PM IST
  • Share this:
கால்நடை மருத்துவர் ஒருவர் கரப்பான்பூச்சி ஒன்றுக்கு அறுவைச் சிகிச்சை செய்து பிரசவம் பார்த்த வீடியோ காட்சி சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது.

ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் கரப்பான்பூச்சி ஒன்றை வளர்ப்புப் பூச்சியாக வளர்த்து வந்தார். சமீபத்தில் தனது வளர்ப்பு கரப்பான்பூச்சி சிரமப்பட்டு வருவதை உணர்ந்த அவர் உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு தனது கரப்பான்பூச்சியை அழைத்துச் சென்றார்.

வளர்ப்புப்பூச்சியின் துன்பத்தைக் காண முடியாமல் உடனடியாக மருத்துவமனைக்கு அந்நபர் எடுத்துச் சென்றார். கரப்பான்பூச்சியை சோதித்த மருத்துவர் அந்தப் பூச்சி கர்ப்பமாக இருப்பதையும் அதற்கு பிரசவம் நேரம் நெருங்கியுள்ளதையும் அறிந்துள்ளார்.


இயற்கையாகப் பிரசவிப்பதில் அந்தக் கரப்பான்பூச்சி சிக்கலைச் சந்தித்துள்ளது. இதனால் உடனடியாக மூன்று விதமான மயக்க மருந்துகள் தரப்பட்டன. உள்ளே எடுத்துக் கொள்ளும் வகையில் ஒரு மயக்க மருந்து, சாதாரண அனஸ்தீஷியா, மற்றும் வாயு அனஸ்தீஷியா ஆகியன அந்தக் கரப்பான்பூச்சிக்குக் கொடுக்கப்பட்டது.

மேலும் பார்க்க: வாடகைக்கு விமானம்... ₹5 லட்சம் பரிசுத் தொகை... தொலைந்த நாயைத் தேடும் பெண்!

அதன் பின்னர் கரப்பானின் உடலிலிருந்து முட்டை பை ஆப்பரேஷன் மூலம் எடுக்கப்பட்டது. சிசேரியன் வெற்றியால் கரப்பான் உயிர் பிழைத்தது. தென் அமெரிக்க காடுகளில் காணப்படும் அர்சிமந்திரத்தா கரப்பான் என்னும் அரிய வகை கரப்பான் இனமான இந்தப் பூச்சி தனது வாழ்நாளில் 8 செ.மீ நீளத்துக்கு வளருமாம்.கரப்பானின் உரிமையாளர் தகுந்த நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருக்காவிட்டால் கரப்பானுக்கு அது தொற்றுவியாதியை ஏற்படுத்தி அதன் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.மேலும் பார்க்க: மக்கர்செய்த மெர்சிடிஸ் AMG G63... ஹெலிகாப்டர் வைத்து நொறுக்கிய யூட்யூபர்..! - வீடியோ
First published: December 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்