Home /News /trend /

வைரலாகும் மிக அரிதான வெள்ளை நிற கங்காரு புகைப்படம்!

வைரலாகும் மிக அரிதான வெள்ளை நிற கங்காரு புகைப்படம்!

வெள்ளை கங்காரு

வெள்ளை கங்காரு

White Kangaroo : வெள்ளை நிற கங்காரு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக எதாவது ஒரு விஷயம் சுவாரஸ்யமாக இருந்தால் அது மிக விரைவிலேயே பலரிடம் சென்று சேர்ந்து விடும். அதே போன்று அந்த தகவல் இணையத்தில் வைரலாவதும் வழக்கம். அந்த வகையில் பல வீடியோக்கள், புகைப்படங்கள் அவ்வப்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதே போன்று சில வினோதமான விஷயங்களும் மிக வேகமாக வைரலாகி விடும். இப்படி ஒரு நிகழ்வு தான் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கான கங்காரு பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்போம்.

கங்காருவின் நிறமானது ஒரு வித இளம் பழுப்பு நிறமாக இருக்கும். இந்த வகை கங்காரு இனங்கள் ஆஸ்திரேலியா முழுக்க பல இடங்களில் காணப்படும். ஆனால், தற்போது ஒருவர் வெள்ளை நிற கங்காரு ஒன்றை கண்டறிந்து உள்ளதாக இணையத்தில் பதிவிட்டு உள்ளார் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர், குயின்ஸ்லாந்தில் ஒரு வெள்ளை கங்காருவைப் பார்த்துள்ளாத தெரிவித்துள்ளார்.

இது பார்த்தது குறித்து அந்த பெண் தனது கண்களை நம்ப முடியவில்லை என்றும் கூறியுள்ளார். நோகோ நிலையத்தைச் சேர்ந்த சாரா கின்னான் என்கிற பெண் தான், இந்த வெள்ளை நிற கங்காருவை பார்த்துள்ளார். இந்த அறிய வகை விலங்கின் புகைப்படங்களை எப்படியோ ஒரு வழியாக எடுத்துள்ளார். பொதுவாக வெள்ளை கங்காருக்கள் மிகவும் அரிதான விலங்கு வகையை சார்ந்தவை. இவை 50,000 முதல் 1,00,000 நபர்களில் ஒருவரின் கண்களுக்கு மட்டுமே தோன்றும் என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே தான் இந்த அரிய விலங்கின் படங்கள் தற்போது வைரலாகி வருவதாகவும் கூறியுள்ளனர்.

also read : மேற்கு வங்க மாநிலத்தின் தெருக்களில் சர்வ சாதாரணமாக உலா வந்த கங்காருக்கள்!



இந்த புகைப்படத்தை எடுத்த சாராவிடம் இது குறித்து கேட்டபோது, "நான் என் கணவருடன் வெளியே சென்று இருந்தேன், நாங்கள் சில ஆட்டுக்குட்டிகளை அப்போது திண்ணையில் இறக்கிவிட்டோம், அங்கே ஒரு வெள்ளை கங்காரு இருந்த்தை கண்டோம். அதைப் பார்க்க மிகவும் நம்பமுடியாததாக இருந்தது, நீங்கள் அதற்கு அருகில் ஒரு வெள்ளைத் தாளை வைத்தால், அது எவ்வளவு வெண்மையாக இருந்தது என்பதை உணரலாம். அது என்னை மிகவும் கவர்ந்தது." என்று தனது சிறப்பான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

also read : மது போதையில் திருமணம் செய்து கொண்ட 2 ஆண்கள் - அடுத்து தான் செம ட்வீஸ்ட்..!

இருப்பினும் அந்த வெள்ளை நிற கங்காருவை நீண்ட நேரம் எங்களால் பார்க்க முடியவில்லை. அது விரைவாக எங்களை விட்டு சென்றுவிட்டது. அதற்கு முன்னதாக இது குறித்து நான் என் கணவரிடம் பேசி, என் கேமராவைப் பெற்றேன். கிடைத்த நேரத்திற்குள் அந்த வெள்ளை கங்காருவை நான் புகைப்படம் எடுத்து விட்டேன்” என்றும் அவர் கூறினார்.

பிறகு அவுட்பேக் பயனியர்ஸ் என்ற பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்தில் இந்த புகைபடத்தை பகிர்ந்துள்ளார். “நீங்கள் எப்போதாவது ஒரு அல்பினோ கங்காருவை புதரில் கண்டிருக்கிறீர்களா? நேற்று, சாரா கின்னான் நோகோ நிலையத்தில் இந்த அரிய மற்றும் அழகான கங்காருவை கண்டுள்ளார். அதை விரைவாக புகைப்படமாக எடுத்து பகிரவும் செய்துள்ளார் என்று அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த பதிவை சுமார் 2,000 பேர் ஷேர் செய்துள்ளனர் மற்றும் 800 க்கும் மேற்பட்டடோர் தங்களது கருத்துகளை கமெண்ட் செய்துள்ளனர்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Trending, Viral Video

அடுத்த செய்தி