பூச்சிகளை இரையாக உட்கொள்ளும் வீனஸ் ஃப்ளைட்ராப் தாவரம் - இந்த அதிசயம் தெரியுமா?

பூச்சிகளை இரையாக உட்கொள்ளும் வீனஸ் ஃப்ளைட்ராப் தாவரம் - இந்த அதிசயம் தெரியுமா?

குளவியை உட்கொள்ளும் வீனஸ் செடி

பூச்சிகளை இரையாக உட்கொள்ளும் வீனஸ் ஃப்ளைட்ராப் தாவரம் குறித்து தெரிந்துகொள்வோம்.

  • Share this:
    இயற்கையில் இருக்கும் மாமிசம் உண்ணும் உயிரினங்கள் குறித்து நாம் அறிவோம். பொதுவாக புலிகள், முதலைகள், சுறாக்கள் என மாமிச உண்ணிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

    ஆனால் ஈக்கள், சிலந்திகள் போன்ற பூச்சிகள் மற்றும் எறும்புகளை ஒரு தாவரம் உட்கொள்ளும் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் வீனஸ் ஃப்ளைட்ராப் என்று அழைக்கப்படும் ஒரு வகையான தாவரம் உயிரினங்களை உட்கொள்கிறது. இது அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் உள்ள துணை வெப்பமண்டல ஈர நிலங்களுக்கு சொந்தமான ஒரு தாவரமாகும்.

    இந்த நிலையில் அமெரிக்காவின் கரோலினா பிராந்தியத்தில் காணப்படும் இந்த வகை தாவரத்தின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் இந்த தாவரம் தனது இரையை எப்படி இலாவகரமாக பிடிக்கிறது என்பது தெரிகிறது.

    எக்ஸ்ட்ரீம் ரைடர் 3 எனப்படும் யூசர், தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஒரு வீடியோவில், வீனஸ் ஃப்ளைட்ராப் தனது இரையை விரைவான நகர்வில் எவ்வாறு பிடிக்கிறது என்பதை காட்டுகிறது. நாற்பத்தேழு விநாடிகள் அடங்கிய அந்த வீடியோவில், அந்த தாவரத்தின் இளஞ்சிவப்பு நிறத்தால் ஈர்க்கப்பட்ட குளவி ஒன்று கிளையின் மீது அமர்கிறது, அதில் இரையை ஈர்க்க பொதுவாக ஒரு வாசனை இருக்கும் என கூறப்படுகிறது.

    செடியில் அமர்ந்திருந்த குளவி அது மரணப் பொறி என்று அறியாமல், அதன் உட்புறங்களை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது. மேலும் மூடி போன்ற ஒரு திறந்த பொறி ஒன்றில் நுழையும் போது, ​​பொறி மூடப்பட்டு குளவியைப் பிடிக்க முயற்சிக்கிறது. ஆனால், அந்த குளவி மற்றொரு திறந்த பொறிக்கு செல்கிறது, அப்போது மறுமுறையும் தப்பிக்காமல் குளவி உள்ளே சிக்கிக்கொண்டதால், பொறி மூடுகிறது.

    இந்த வீடியோ லட்சக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்த யூசர் ஒருவர், ஹாஹாஹாஹா !! ’வீனஸ் ஃப்ளைட்ராப் விரும்புகிறேன், ஏனெனில் அது என் ஜன்னலில் வரும் எறும்புகளை சாப்பிடுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொருவர் குளவி, கவனக்குறைவாக அதன் சொந்த அழிவை நோக்கி சென்றதால் இந்த விளைவு ஏற்பட்டுள்ளது, "வீனஸ் ஃப்ளைட்ராப் அதன் இரையுடன் நிழல் விளையாட்டுகளை விளையாடுகிறது" என கூறியுள்ளார்

    வீனஸ் ஃப்ளைட்ராப்பின் கொலையாளி உள்ளுணர்வைப் பற்றி ஒரு பயனர் எழுதினார், அதில் "வீனஸ் சூரியனில் இருந்து சக்தியைப் பெற முடியும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அதற்கு பதிலாக உயிரினங்களை சாப்பிடுகிறது என்றார். பொறிகளின் விளிம்பில் உள்ள கூர்முனைகள் இரையை தாக்கும் வகையில் செயல்படுகின்றன. இதனால் அவை தப்பிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

    வீனஸ் ஃப்ளைட்ராப்பின் உள்ளே இரை சென்றவுடன் அது தப்பிக்க போராடக்கூடும், இது அந்த தாவரத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது, ஏனெனில் அதன் உட்புறங்களில் உள்ள ஒட்டும் பொருள் இரையை உள்ளே சிக்க வைக்கிறது. சில நிமிடங்களுக்கு பிறகு, அதிலிருந்து சுரக்கும் பசை இரையை முழுமையாக மூடுகிறது. இந்த பொறி ஒரு செரிமான அமைப்பாக மாறும் போது, ​​இரையின் உறுப்புகளை அதன் செரிமான சாறுகளுடன் உறிஞ்சிவிடும்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: