• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • கொடிய விஷமுள்ள முல்கா பாம்புகளின் சண்டை.. வைரலாகும் வீடியோ..

கொடிய விஷமுள்ள முல்கா பாம்புகளின் சண்டை.. வைரலாகும் வீடியோ..கொடிய விஷமுள்ள முல்கா பாம்புகள் சண்டையிடும் வீடியோ வைரல்!

கொடிய விஷமுள்ள முல்கா பாம்புகள் சண்டையிடும் வீடியோ வைரல்!

ஆஸ்திரேலிய வனவிலங்கு சரணாலயத்தில் இரண்டு விஷ பாம்புகள் (venomous snakes) கட்டிக்கொண்டு சண்டையிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. பார்ப்பதற்கே பயமுறுத்தும் படி இரு பாம்புகளும் கட்டிப்புரண்டு தங்களது ஆதிக்கத்தை நிரூபிக்க முயற்சி செய்யும் வீடியோ இணையதளத்தில் நெட்டிசன்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  • Share this:
ஆஸ்திரேலிய வனவிலங்கு கன்சர்வேன்சியின் (Australian Wildlife Conservancy) பேஸ்புக் (Facebook) பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ கிளிப்பில், இரண்டு விஷமுள்ள முல்கா பாம்புகள் (mulga snakes) ஒன்றையொன்று சுற்றிக் கொண்டு, தங்கள் ஆதிக்கத்தை நிரூபிக்க கட்டி உருள்வதைக் காட்டுகிறது, மேலும் பெண் பாம்புகளுடன் இணைவதற்கான சண்டையாக இது உள்ளது.

வீடியோவில், ஸ்கொட்டியா வனவிலங்கு சரணாலயத்தில் (Scotia Wildlife Sanctuary) முல்கா பாம்புகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சண்டையிட்டுக் கொண்டிருப்பதை கன்சர்வேன்சி குறிப்பிட்டுள்ளது. இந்த வீடியோ கிளிப்பைப் பதிவுசெய்த AWC சூழலியல் நிபுணர் தாலி மொய்ல் (AWC ecologist Tali Moyle), "பாம்புகளின் இனச்சேர்க்கை காலம் வசந்த காலத்தின் துவக்கத்தில் தொடங்குகிறது. இதனால் ஆண் பாம்புகள் சண்டையிடத் தொடங்குகின்றது, ஒன்றுடன் ஒன்று கட்டிப்புரண்டு தங்களது ஆதிக்கத்தை நிரூபிக்க முயற்சிக்கிறது, பெண் பாம்புகளுக்கு துணையாக இருப்பதற்கான உரிமைக்காக அவை இது போன்று செய்கின்றது". முல்கா பாம்புகள் மிகவும் பொதுவானவை என்றாலும், இந்த நடத்தை சற்றே வித்தியமானது என்றும் மொய்ல் குறிப்பிட்டுள்ளார்.

சண்டையின்போது, பாம்புகள் வழக்கமாக ஒன்றோடு ஒன்று கட்டிப்புரண்டு, தனது எதிரி பாம்பினை தங்கள் தலையால் கீழே தள்ள முயற்சிக்கின்றன.இந்த வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டதிலிருந்து, தற்போது வரை 2 லட்சம் பார்வைகளையும், 324 லைக்குகளையும் பெற்றுள்ளது. பல பயனர்கள் அதை சுவாரஸ்யமாகக் கண்டாலும், மற்றவர்களோ இது பாம்புகளின் இனச்சேர்க்கைக்கான செயல் என்று நினைத்தார்கள்.

ஒரு பயனர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், "எனது மோசமான கனவு ... முல்கா வலிமைமிக்கது!" என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனரோ, “பாம்புகள் சண்டையிடுவதையோ, அவைகள் இனச்சேர்க்கையோ நான் கவனிக்கவில்லை, அவைகள் நிமிர்ந்து நிற்பதைப் பார்ப்பது மிகவும் விசித்திரமாக உள்ளது" என்றார். மூன்றாவதாக ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “இது ஒரு இனச்சேர்க்கை நிலை என்று நான் நினைத்தேன், மலைப்பாம்புகள் மட்டுமே இதைச் செய்துள்ளன என்று முன்னர் நினைத்திருந்தேன், எனவே இப்போது தெரிந்துகொண்டேன்” என்றார்.

முல்கா பாம்புகள் ஆஸ்திரேலியா முழுவதும் காணப்படும் மிகப்பெரிய பாம்புகள். இந்த வீடியோ படமாக்கப்பட்ட ஸ்கோடியா வனவிலங்கு சரணாலயம் (Scotia Wildlife Sanctuary) முர்ரே-டார்லிங் பேசினில் (Murray-Darling Basin) அமைந்துள்ளது. 65,000 ஹெக்டேர் பரப்பளவுள்ள சரணாலயத்தில் 8,000 ஹெக்டேர் பரப்பளவில் நரிகளும், புலிகளும் இல்லாத பகுதி உள்ளது. ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய அச்சுறுத்தலான வனவிலங்குகளுக்கு இது ஒரு தங்குமிடம். ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவது போன்ற விலங்குகளின் பயமுறுத்தும் வீடியோ கிளிப்பை நெட்டிசன்கள் கண்டது இது முதல் முறை அல்ல. சமீபத்தில் இரண்டு ஆண் புலிகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இணையதளத்தில் பரவலாகப் பகிரப்பட்ட கிளிப்பில், சுற்றுலாப் பயணிகள் பார்க்கும்போது இரண்டு புலிகள் கர்ஜித்து ஒன்றையொன்று சண்டையிட்டு கொள்வதை காணலாம். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தின் பெஞ்ச் தேசிய பூங்காவில் உள்ள கர்மசாரி கேட்டில் (Karmazari gate at Pench National Park in Madhya Pradesh) அருகே நடந்ததாக கூறப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளில் ஒருவர் இந்த வீடியோவை யூடியூபில் (YouTube) பகிர்ந்துள்ளார், அதன் பிறகு இது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: