மணமேடையில் மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்... சட்டென்று சுதாரித்த உறவினர்கள் - வீடியோ

வீடியோ காட்சி

திருமணத்தின் போது ஆண்களை விட பெண்களுக்கு சற்று பயம் அதிகம் இருப்பதால் அவர்களின் நடவடிக்கைகளில் பதற்றம் சற்று மேலோங்கி இருக்கும்.

 • Share this:
  திருமணம் என்பது வாழ்வின் முக்கியமான சுபநிகழ்ச்சி ஆகும். திருமணத்தின் போது மணமகன் மற்றும் மணமகள் இருவரும் சற்று பதற்றத்துடன் இருப்பது வழக்கமான ஒன்று தான். பல சம்பிரதாயம் மற்றும் சடங்குகள் நடக்கும் போது பதற்றத்தின் காரணமாக வேடிக்கையான நிகழ்வுகளும் நடக்கும்.

  திருமணத்தின் போது ஆண்களை விட பெண்களுக்கு சற்று பயம் அதிகம் இருப்பதால் அவர்களின் நடவடிக்கைகளில் பதற்றம் சற்று மேலோங்கி இருக்கும். அப்படியொரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் இருக்கும் மணமகன் மற்றும் மணமகள் ஒருவொருக்கு ஒருவர் மாலையை மாற்றுகின்றனர்.
  மணமகன் அவர் அருகில் இருக்கும் மணமகளுக்கு மாலை அணுவிக்கிறாள். ஆனால் பெண் மாலை அணிவிக்கும் போது அது மணமகனின் தலைபாகையில் மாட்டிக்கொண்டது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இருவரும் தவித்து போய் நிற்கின்றனர். குறிப்பாக மணமகள் சற்று அதிக பயத்துடனும், பதற்றத்துடன் திகைத்து போய் நின்று கொண்டிருந்தார்.

  ஆனால் இதை பார்த்த அருகில் இருந்த உறவினர்கள் சட்டென்று மணமகனின் தலையில் மாட்டிக் கொண்ட மாலையை விடுவித்து சரிசெய்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. 15,000-க்கும் அதிகாமானோர் இந்த வீடியோவை லைக் செய்தள்ளனர்.

  இதேப்போன்று மணமகள் ஒருவர் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும் போதே இப்படியா? என்பது போன்ற சலிப்பை ஏற்படுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவில் இருக்கும் மணப்பெண் அரிசி நிறைந்திருக்கும் படியை கால்பந்தை எட்டி உதைப்பது போல் வேகமாக எட்டி உதை்து வருகிறாள். அரிசி வீடு முழுவதும் இறைந்து விடுகிறது. இது அங்கிருந்த உறவினர்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.   
  View this post on Instagram

   

  A post shared by kannada videoz (@kannada_videoz)


  அரிசி நிறைந்துள்ள படியை காலால் தட்டி விடுவது சம்பிரதாயம். ஆனால் அதை கால்பந்து போல் வீசி அடிப்பது யாரும் எதிர்பாராத ஒன்றாக இருந்திருக்கும். இந்த வீடியோவை மில்லியன் கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். மேலும் அந்த மருமகளை விமர்ச்சித்தும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: