பெண்களின் பாதுகாப்புக்காக குறைந்த விலையில் லிப்ஸ்டிக் துப்பாக்கி - இளைஞருக்கு பாராட்டு!

மொபைல் போன் மூலம் ப்ளூடூத் இணைப்பையும் இதில் மேற்கொள்ளலாம். லிப்ஸ்டிக் துப்பாக்கியை சார்ஜ் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது.

பெண்களின் பாதுகாப்புக்காக குறைந்த விலையில் லிப்ஸ்டிக் துப்பாக்கி - இளைஞருக்கு பாராட்டு!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: January 10, 2020, 8:12 PM IST
  • Share this:
பெண்களின் பாதுகாப்புக்காக மிகுந்த மலிவான விலையில் லிப்ஸ்டிக் துப்பாக்கி ஒன்றை கண்டுபிடித்துள்ளார் உத்தரபிரதேச இளைஞர் ஒருவர்.

உத்தரபிரதேசத்தின் வாரணாசியைச் சேர்ந்தவர் ஷ்யாம் செளரசியா. பெண்களின் பாதுகாப்புக்காக வெறும் 600 ரூபாய் மதிப்பில் இந்த லிப்ஸ்டிக் துப்பாக்கியை அந்த இளைஞர் வடிவமைத்துள்ளார். அறிவியல் விஞ்ஞானி ஆக விரும்பும் ஷ்யாம் கூறுகையில், “ஒரு பெண் தனக்கு பிரச்னை ஏற்படும் போது லிப்ஸ்டிக்கில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தினால் போதும்.

உடனே துப்பாக்கி குண்டு வெடிப்பது போன்ற ஒரு சத்தம் எழும். அதனுடன் உடனடியாக அவசர உதவி எண் 112-க்கு உதவி கோரி குறுந்தகவல் செல்லும். சாதாரண ஒரு லிப்ஸ்டிக் போன்றே இருப்பதால் யாருக்கும் சந்தேகம் வராது. மொபைல் போன் மூலம் ப்ளூடூத் இணைப்பையும் இதில் மேற்கொள்ளலாம்.


லிப்ஸ்டிக் துப்பாக்கியை சார்ஜ் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது. இதனது விலை 600 ரூபாய் மட்டுமே. இந்த லிப்ஸ்டிக் துப்பாக்கிக்கு காப்புரிமை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்” என்றார்.

மேலும் பார்க்க: காதலைச் சொல்ல 6 மாத உழைப்பில் ஒரு திரைப்படத்தையே உருவாக்கிய காதலன்!- வீடியோ
First published: January 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்