மக்கா சோளம் விற்கும் வியாபாரியின் தள்ளுவண்டியை கவிழ்த்த போலீஸ்... இணையத்தில் குவிந்த கண்டனங்கள்

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஷிவ்பூர் என்ற இடத்தில் வியாபாரியின் தள்ளு வண்டியை போலீஸ் உதவி ஆய்வாளர் கவிழ்த்துள்ளார்.

மக்கா சோளம் விற்கும் வியாபாரியின் தள்ளுவண்டியை கவிழ்த்த போலீஸ்... இணையத்தில் குவிந்த கண்டனங்கள்
வியாபாரியின் தள்ளுவண்டியை கவிழ்த்த போலீஸ்
  • Share this:
உத்தரபிரதேச மாநிலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடை போட்டதாக கூறி மக்கா சோளம் விற்கும் வியாபாரியின் வண்டியை போலீஸ் உதவி ஆய்வாளர் கவிழ்த்துள்ளார்.

இந்த செயலை அங்கிருந்த நபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டார். இதனால் இணையத்தில் கண்டனங்கள் குவிந்தன.

 
வாரணாசியில் உள்ள ஷிவ்பூர் என்ற இடத்தில் நடந்த இந்த சம்பவத்தில் உதவி ஆய்வாளர் வருண் குமார் ஷாஷி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவலர் மீது விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக பாதிக்கப்பட்ட வியாபாரியிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் வருத்தத்தை தெரிவித்துக்கொண்டதுடன் இழப்பீட்டு தொகையையும் அளித்தனர்.
First published: August 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading