முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ட்விட்டரில் ட்ரெண்டாகும் வலிமை ஹேஷ்டேக் ... கொண்டாடும் அஜித் ரசிகர்கள்

ட்விட்டரில் ட்ரெண்டாகும் வலிமை ஹேஷ்டேக் ... கொண்டாடும் அஜித் ரசிகர்கள்


ட்விட்டரில் ட்ரெண்டாகும் வலிமை ஹேஷ்டேக்

ட்விட்டரில் ட்ரெண்டாகும் வலிமை ஹேஷ்டேக்

Valimai Second Single : தற்போது ட்விட்டரில் வலிமை திரைப்படத்தின் டீசர் தொடர்பாக வலிமை செகண்ட் சிங்கிள் ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது. மேலும் வலிமை பொங்கல் எனும் ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகின்றது. இதில் அஜித் ரசிகர்கள் வலிமை குறித்த பதிவுகளை மகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே ட்விட்டரில் #ValimaiSecondSingle, #ValimaiPongal என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது.

நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் 2022 பொங்கலை முன்னிட்டு ஜனவரியில் வெளியாகிறது. இதுவரை எந்த பெரிய தமிழ்ப் படமும் பொங்கல் வெளியீட்டை அறிவிக்கவில்லை. வலிமை படத்தின் யுஎஸ், யுகே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிற ஐரோப்பா நாடுகளின் விநியோக உரிமையை ஹம்சினி என்டர்டெயின்ட்மெண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.

தமிழ் மட்டுமின்றி பிற மொழிப் படங்களையும் வெளிநாடுகளில் விநியோகிக்கும் பெரிய நிறுவனம் இது. டிசம்பர் 17 ஆம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகும் அல்லு அர்ஜுனின் புஷ்பா - தி ரைஸ் படத்தின் வெளிநாடு உரிமையையும் இவர்களே வாங்கியுள்ளனர்.

தற்போது ட்விட்டரில் வலிமை திரைப்படத்தின் டீசர் தொடர்பாக வலிமை செகண்ட் சிங்கிள் ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது. மேலும் வலிமை பொங்கல் எனும் ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகின்றது. இதில் அஜித் ரசிகர்கள் வலிமை குறித்த பதிவுகளை மகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.

First published:

Tags: Actor Ajith, Valimai