முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / காதலர் தினம் 2023; இதயமாகும் இரு துளிகள்.. டூடுள் வெளியிட்டு சிறப்பித்த கூகுள் நிறுவனம்..!

காதலர் தினம் 2023; இதயமாகும் இரு துளிகள்.. டூடுள் வெளியிட்டு சிறப்பித்த கூகுள் நிறுவனம்..!

காதலர் தினம்.. கூகுள் டூடுள்

காதலர் தினம்.. கூகுள் டூடுள்

Valentine's Day 2023 | காதலர் தினம் 2023 என்ற தேடுதலுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. அதில், சமீபத்தில் காதலர் தினம் தொடர்பான நடந்த நிகழ்வுகள் உள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • internationa, Indiaamericaamerica

உலகில் தலைசிறந்த நபர்கள், அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள், முக்கியமான கண்டுபிடிப்புகள், முக்கிய நிகழ்வுகள், முக்கியத்துவம் வாய்ந்த நாள் போன்றவற்றை நினைவு கூறும் விதமாகவும் கவுரவிக்கும் விதமாகவும் கூகுள் நிறுவனம் டூடுல்களை வெளியிட்டு வருகிறது.

உலகம் எங்கும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சமீப காலமாக உலகின் அனைத்து இடங்களிலும் காதலர் தினம் ஒரு திருவிழாவைப் போல கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் புதிய டூடுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

அனிமேஷனாக உருவாக்கப்பட்டுள்ள அந்த டூடுளில் கண்களுடன் கூடிய இரண்டு மழைத் துளிகள் ஒன்றுசேர்ந்து இதய வடிவிலான துளியாக மாறுகிறது. அதுபோலவே டூடுளை நாம் க்ளிக் செய்தால் அதுவாகவே காதலர் தினம் 2023 என்ற தேடுதலுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. அதில், சமீபத்தில் காதலர் தினம் தொடர்பான நடந்த நிகழ்வுகள் உள்ளன.

மேலும் Google  லோகோ காதலின் நிறம் என்று சொல்லப்படும் பிங்க் நிறத்தில் இடம்பெற்றுள்ளது. டூடுளை பார்த்துவிட்டு சர்ச் செய்து உள்ளே செல்லும் பார்வையாளர்கள், காதலர் தினத்துக்கான சிறப்பு வடிவமைப்பைக் கண்டு ரசிக்கின்றனர்.

First published:

Tags: Lovers day, Valentine's day