முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / #WeMetOnTwitter என்ற ஹேஷ்டேக் மூலம் தங்கள் காதல் கதைகளை பகிர்ந்து வரும் ஜோடிகள்...

#WeMetOnTwitter என்ற ஹேஷ்டேக் மூலம் தங்கள் காதல் கதைகளை பகிர்ந்து வரும் ஜோடிகள்...

WeMetOnTwitter : டிவிட்டர் பயனாளர் காத்தா இவர் பிப்ரவரி மாதத்தில் தனது காதலருடன் மேற்கொண்ட சந்திப்பு குறித்த போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

WeMetOnTwitter : டிவிட்டர் பயனாளர் காத்தா இவர் பிப்ரவரி மாதத்தில் தனது காதலருடன் மேற்கொண்ட சந்திப்பு குறித்த போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

WeMetOnTwitter : டிவிட்டர் பயனாளர் காத்தா இவர் பிப்ரவரி மாதத்தில் தனது காதலருடன் மேற்கொண்ட சந்திப்பு குறித்த போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

  • Last Updated :

அனைத்து வகையான விவாதங்களை நடத்துவதற்கு டிவிட்டர் சரியான இடமாக விளங்குகிறது. இந்த ஆண்டு காதலர் தினத்தை ஒட்டி காதலர்கள் பலர் தங்கள் காதல் கதைகளை #WeMetOnTwitter என்ற ஹேஸ்டேக் மூலமாக பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த 2020ஆம் ஆண்டில் டிவிட்டர் தளத்தில் பகிரப்பட்ட காதல் கதைகளைக் காட்டிலும், 2021 ஆம் ஆண்டில் பகிரப்பட்ட காதல் கதைகளின் எண்ணிக்கை 370 சதவீதம் அதிகம் என்று டிவிட்டர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி பிற்பகுதி முதல் பிப்ரவரி வரையிலான ஒரு மாதத்திற்குள் இந்த ஹேஷ்டேக் மூலம் பகிரப்படும் காதல் கதைகளின் எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரித்துள்ளது.

பொதுவாக ட்ரோல் செய்வதற்கான மிகத் தேர்ந்த இடமாக கருதப்படும் டிவிட்டர் இணையதளம், சில சமயங்களில் ஆரோக்கியமான விவாதங்களுக்கும் வழிவகை செய்கிறது. இந்த ஆண்டில் காதல் ஜோடிகள் பகிர்ந்து கொண்ட சில காதல் கதைகளை பார்க்கலாம். சமீர் அல்லானா - இவர் கிரிக்கெட் விளையாட்டு ஆர்வலர் ஆவார். சானா ஷரீஃப் என்ற பல் மருத்துவரை இவர் காதலித்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திருமணம் செய்து கொண்டார். அவர் தனது திருமண புகைப்படங்களை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

டிவிட்டர் பயனாளர் காத்தா இவர் பிப்ரவரி மாதத்தில் தனது காதலருடன் மேற்கொண்ட சந்திப்பு குறித்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் கூறியுள்ள செய்தியில், “எங்கள் கதையை உங்களுக்காக நாங்கள் ஷேர் செய்யவில்லை. எங்களுக்காக நாங்கள் செய்து கொள்கிறோம். நீங்கள் எங்கள் முடிவுக்கு மதிப்பு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம். இறுதியாக நீங்கள் எல்லோரும் அளித்துவரும் அன்புக்கு எனது நன்றி’’ என்று கூறியுள்ளார்.

ஆர்ட்டிஸ்ட் சிஃப் என்ற பயனாளர் தன்னுடைய ஜோடியை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சந்தித்த புகைப்படம் ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். நண்பர்களின் சந்திப்பு காதலர்கள் மட்டும் அல்ல. ஒத்த கருத்துடைய நண்பர்கள் சிலரும் டிவிட்டர் மூலமாக தங்கள் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக இணையதளம் மூலமாக சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்து, அதனை தொடர்ந்து இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் சந்தித்த புகைப்படங்கள் பலவற்றை டிவிட்டரில் பகிர்ந்து கொள்கின்றனர்.

top videos

    ஆர்ட்டிஸ்ட் ரோனின் இவர் தனது காதல் கதையை பகிர்ந்து கொண்டுள்ளார். ஆன்லைன் மூலமாக சந்தித்து மூன்று ஆண்டுகளை கடந்த பிறகு 2018 ஆம் ஆண்டில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் ஆனது. சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆன்லைன் மூலமாக காதலித்த பிறகு, காதலியின் 25ஆவது பிறந்தநாளில் அவரை நேரில் சந்தித்ததாக அவர் கூறியுள்ளார்.

    First published:

    Tags: Twitter, Valentine Day 2021