ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

தனுஷின் ’ச்சில் ப்ரோ’ பாடலுக்கு கலக்கலாக டான்ஸ் ஆடிய வடிவேலு... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தனுஷின் ’ச்சில் ப்ரோ’ பாடலுக்கு கலக்கலாக டான்ஸ் ஆடிய வடிவேலு... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தனுஷ் மற்றும் வடிவேலு

தனுஷ் மற்றும் வடிவேலு

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  தனுஷின் ’ச்சில் ப்ரோ’ பாடலுக்கு வடிவேலு டான்ஸ் ஆடுவது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

  கொடி பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து படம் பட்டாஸ். புதுப்பேட்டை படத்துக்கு பின்னர் நடிகை சினேகா இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்திருந்தார். இவர்களுடன் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

  Also see... பாலிவுட்டின் 'அர்ஜுன் ரெட்டி' ஷாஹித் கபூருக்கு ஹாப்பி பர்த்டே!

  பட்டாஸ் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15-ம் தேவி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் தனுஷ் எழுதி பாடியிருந்த 'Chill Bro’ என்ற பாடல் ரசிகர்களை கவர்ந்தது.

  இந்நிலையில் இந்த 'Chill Bro’ பாடலுக்கு வடிவேலு நடனமாடுவது போன்ற வீடியோ மீம் ஒன்றை நெட்டிசன்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். அதில், வடிவேலு எப்பொழுதோ போட்ட ஸ்டெப்ஸுகள் 'Chill Bro’ பாடலுக்கு அவ்வளவு பொருத்தமாக உள்ளது.

  இந்த வீடியோ நெட்டிசன்களால் பாராட்டப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Vadivelu