• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • நான் பாட்டுக்கு சிவனேனு தானடா இருந்தேன்.. ட்ரெயினுக்காக காத்திருந்தவருக்கு கன்னத்தில் விழுந்த பளார்..!

நான் பாட்டுக்கு சிவனேனு தானடா இருந்தேன்.. ட்ரெயினுக்காக காத்திருந்தவருக்கு கன்னத்தில் விழுந்த பளார்..!

ட்ரெயினுக்காக காத்திருந்தவருக்கு கன்னத்தில் விழுந்த பளார்

ட்ரெயினுக்காக காத்திருந்தவருக்கு கன்னத்தில் விழுந்த பளார்

நடிகர் வடிவேலுவின் வசனம் பொருந்தும் வகையில் வீடியோ ஒன்று இணயத்தில் வைரலாகி வருகின்றது.

  • Share this:
    ஆணியே புடுங்க வேணாம் ’ ,‘நீங்க புடுங்குறது எல்லாமே , ‘தேவையில்லாத ஆணிதான்’,‘சங்கி மங்கி அடங்கோ’ ,‘நம்ம ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே இன்னும் பயிற்சி வேண்டுமோ’ ‘வந்துட்டான்யா வந்துட்டான்’, ‘வேணாம்… வலிக்குது அழுதுருவேன்’, ‘எதையும் பிளான் பண்ணிதான் பண்ணனும்’, ‘பீ கேர்ஃபுல் என்னய சொன்னேன்'...

    இவையெல்லாம் வடிவேலு சினிமாவில் பேசிய வசனங்கள். இவை மக்களின் மொழியும் கூட. அந்த அளவுக்கு இந்த வசனங்கள் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டன. இப்படி வடிவேலு பேசிய வசனங்களை மட்டும் வைத்து ஒரு தனியான அகராதியையே உருவாக்கி விடலாம்.

    அந்த அளவிற்கு மக்களின் அன்றாட வாழ்க்கையோடு வடிவேலு பின்னிப் பினைந்துள்ளார். தற்போது நடிகர் வடிவேலுவின் வசனம் பொருந்தும் வகையில் வீடியோ ஒன்று இணயத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் ரயிலை பயணம் செய்ய பிளாட் பார்மில் இளைஞர் ஒருவர் நான் யாரு வம்புக்கு போறதில்ல நான் உண்டு என் வேல உண்டுனு சிவனேனு இருக்க எதிரில் ரயில் ஒன்று வருகின்றது.

    அதில் கூட்டமாக வாசல் வரை இன்று பயணம் செய்பவர்களில் ஒருவர் பிளாட் பார்மில் நின்று கொண்டிருந்த இளைஞரின் கண்ணத்தில் ஓங்கி அறைந்து விட்டுச் செல்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. நான் பாட்டுக்கு சிவனேனு தான்டா இருந்தேன் என இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ பலரின் கவனம் பெற்று வைரலாகி வருகின்றது.



    நடிகர் வடிவேலு மற்றும் விலங்குகளை வைத்து இணையத்தில் வீடியோக்கள் பல இதற்க்கு முன்னர் வைரலாகி உள்ளது.



    குரங்குகள் ,நாய்கள் மற்றும் பூனைகளை வைத்து நகைச்சுவையாக இந்த வீடியோக்களை உருவாக்கி இருப்பர். இந்த வீடியோ பலரின் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி உள்ளது.



    இதனை பார்க்கும் பொழுது மனதில் உள்ள பாரமே குறைஞ்சு போச்சு என இணையவாசிகள் கமெண்ட்ஸ்ஸில் கருத்துக்களை பகிர்ந்திருப்பர். இவை அனைத்தும் அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் வாக்கியங்கள். பலர் இப்பொது வரை சைக்கிளை எடுத்தாலே நடிகர் வடிவேலுவின் என்ன ஆறுமுகம் ஆளே பாக்க முடியல எப்படி இருக்க .. வரட்டா ஆ ஆ ஆ என்ற வசனம் தானாக வாய்க்குள் வருவதாக இணையத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: