டிக்டாக்கில் இணைந்த காவல்துறை.. தற்காப்பைக் கற்றுத் தரும் வீடியோக்கள் வைரல்..

பதிவிட்ட அடுத்த நொடியிலேயே 14,000 பயனாளர்கள் இணைந்துள்ளனர்.

Web Desk | news18
Updated: August 17, 2019, 6:12 PM IST
டிக்டாக்கில் இணைந்த காவல்துறை.. தற்காப்பைக் கற்றுத் தரும் வீடியோக்கள் வைரல்..
டிக்டாக்
Web Desk | news18
Updated: August 17, 2019, 6:12 PM IST
டிக்டாக் தவறான விஷயங்களை மட்டுமே கற்பிக்கிறது என சொல்வோருக்கு மத்தியில் இப்படி தற்காப்பு பயிற்சிகளையும் பயிற்றுவிக்கிறது காவல்துறை.

உத்திரகாண்ட் காவல்துறை டிக்டாக்கில் புதிதாக இணைந்துள்ளது. அதில் மக்களுக்குத் தேவையான தற்காப்பு பயிற்சிகள் , பாதுகாப்பு விழிப்புணர்வுகள், குடிமகன்களுக்கான பொருப்புகள் என வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் என்ன ஒரு ஆச்சரியமெனில் அவர்கள் பதிவிட்ட அடுத்த நொடியிலேயே 14,000 பயனாளர்கள் இணைந்துள்ளனர். அவற்றை 1 லட்சம்பேர் கண்டுள்ளனர்.
இதன் மூலம் மக்களிடம் நேரடித் தொடர்பை உண்டாக்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சமீபத்தில் சுதந்திர தினத்திற்காகவும் சில வீடியோக்களை பகிர்ந்தனர் அவை மில்லியனை எட்டியுள்ளன. இது குறித்து உத்திரகாண்ட் காவல்துறை ஜெனரல் இயக்குநர் அஷோக் குமார் “ மக்களிடம் விழிப்புணர்வுகளை கொண்டு சேர்க்க நல்ல வாய்ப்பாக இருக்கிறது. இதில் தொடர்ந்து சாலை பாதுகாப்பு, பெண்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு விழிப்புணர்வுகளை தொடர்ந்து பகிரவுள்ளதாக” கூறியுள்ளார்.

பார்க்க : கடைசிநாளில் பக்தர்களுக்கு அருள் பாலித்த அத்திவரதர்!

First published: August 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...