திருமண ஊர்வலத்தில் PPE கிட் அணிந்தபடியே உற்சாக நடனமாடிய ஆம்புலன்ஸ் டிரைவர்.. வைரலாகும் வீடியோ!

உற்சாக நடனமாடிய ஆம்புலன்ஸ் டிரைவர்

இந்த கொரோனா காலத்தில் மருத்துவ ஊழியர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் என அனைவரும் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே பிபிஇ கிட் அணிந்திருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் , திருமண ஊர்வலத்தில் உற்சாகமாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது..

  • Share this:
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கொடிய பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற போராடி வருவது கொரோனா வாரியர்கள் என்றழைக்கப்படும் மருத்துவ ஊழியர்கள் தான். மேலும், தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை பல லட்ச மக்களை பாதித்து வரும் நிலையில் மருத்துவ ஊழியர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் என அனைவரும் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில் உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானி பகுதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவரின் நடன வீடியோ பலரின் இதயங்களை வென்றுள்ளது. அவர் திருமண ஊர்வலத்தின் போது PPE கிட் அணிந்தபடி நடனமாடி அங்கிருந்த மக்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை இரவு சுஷிலா திவாரி மருத்துவக் கல்லூரிக்கு வெளியே டெஹ்ராடூனில் இருந்து 280 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஹல்ட்வானி என்ற நகரத்தில் நடந்தது. தற்போது அப்பகுதி முழுவதும் கொரோனா ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ : டிக்கெட் எடுக்காததால் நகரும் பேருந்தில் இருந்து குதித்த நபர் - உக்ரைனில் அதிர்ச்சி சம்பவம்!

மேலும் கடந்த வாரம் கோவிட் கட்டுப்பாடுகளுக்கு இடையில், குறைந்த மக்கள் எண்ணிக்கை கொண்ட திருமண ஊர்வலம் மருத்துவ நிறுவனத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று பிபிஇ கிட் அணிந்த நபர் ஒருவர் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு, நிகழ்வில் போடப்பட்டிருந்த பாலிவுட் இசைக்கு ஏற்ப நடனமாடத் தொடங்கினார். இவர் நடமாட தொடங்கியதும் ஊர்வலத்தில் இருந்த மற்ற மக்கள் முதலில் அதிர்ச்சியாகினர்.

பின்னர், அந்த அழைக்கப்படாத நடனக் கலைஞர் உண்மையில் மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்கும் ஆம்புலன்ஸ் டிரைவர் என்பதை உணர்ந்தார். பிபிஇ கிட் அணிந்திருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் மகேஷ், திருமண ஊர்வலத்தில் இருந்தவர்களின் மனநிலையை உற்சாகப்படுத்த உதவியுள்ளார். மேலும் கோவிட் -19 நெருக்கடியை எதிர்த்துப் போராட ஒவ்வொரு நாளும் 18 மணி நேர ஷிப்டுகளில் பணிபுரிந்து வந்த மகேஷ், தனக்கும், தன்னை போன்ற மற்ற ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் மனஅழுத்தத்தை போக்க ஒரு இடைவெளி தேவை என்று கூறினார்.

ALSO READ : செடிகளுடன் கூடிய கண்ணாடி மாஸ்க்கோடு வீதியில் உலாவும் பெல்ஜிய கலைஞர் - வீடியோ

இதுகுறித்து நியூஸ் 18 உடன் பேசிய மகேஷ், திருமண ஊர்வலத்தில் தனது சொந்த மனநிலையையும், திருமண ஊர்வலத்தில் இருந்தவர்களின் மனநிலையையும் அறிய நடனமாடத் தொடங்கியதாக தெரிவித்தார். அப்போது, விருந்தினர்களில் ஒரு சிலர் மட்டுமே நடனமாடி வந்தனர். இதுதவிர பெரும்பாலானவர்கள் சற்று கவலைப்பட்டதாகவும் பயந்துபோனதாகவும் அவர் குறிப்பிட்டார். முதலில் சாதாரண திருமண ஊர்வலம் போல் இல்லாமல் இருந்தது. ஆனால் மகேஷ் சேர்ந்தவுடன், ஊர்வலத்தில் இருந்தவர்கள் எல்லோரும் நடனமாட ஆரம்பித்தனர்.

  

நடனமாடிய ஆம்புலன்ஸ் டிரைவரின் வீடியோ திருமண விருந்தினர்களில் ஒருவரால் படமாக்கப்பட்டது. பின்னர் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. கொரோனாவின் வளர்ந்து வரும் பாதிப்புகளைத் தடுக்க மாநில அரசு, திருமண விழாக்களுக்கு 50 பேருக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும் என்ற வரம்பை நிர்ணயித்துள்ளது. மேலும் திருமண நிகழ்வை நடத்த சம்பந்தப்பட்ட தரப்பினர் உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும்.

ALSO READ : பிடித்த வார்த்தையை கிசுகிசுத்ததும் தூங்கி கொண்டிருந்த நாய் கொடுத்த செம்ம ரியாக்ஷன் - வைரலாகும் வீடியோ!

மேலும் தற்போது இந்தியாவில் திருமண சீசன் நடைபெற்று வருகிறது. ஆனால் கொரோனா காரணமாக, பல தம்பதிகள் தங்கள் திருமணங்களை ஒத்திவைத்துள்ளனர். சிலர் மாநில அரசு நிர்ணயித்த நெறிமுறைகளின்படி விழாக்களை நடத்தி வருகின்றனர்.

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில், உத்தரகண்ட் மாநிலத்தில் டெஹ்ராடூன், ஹல்த்வானி, ரிஷிகேஷ், ருத்ராபூர், ராம்நகர் உள்ளிட்ட பல நகரங்களில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Sankaravadivoo G
First published: