Home /News /trend /

கை குழந்தையை டிராக்டர் முன் வீசிய தாய்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ!

கை குழந்தையை டிராக்டர் முன் வீசிய தாய்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ!

கை குழந்தையை டிராக்டர் முன் வீசிய தாய்

கை குழந்தையை டிராக்டர் முன் வீசிய தாய்

Viral Video | நிலப்பிரச்சனையால் குழந்தையை பலிக்கொடுத்த முயன்ற தாயின் செயலை வீடியோ எடுத்த உள்ளூர்வாசி ஒருவர் இணையத்தில் பதிவிட்டார்.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரு சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட நிலத்தகராறு பிரச்சனையால், வயலில் உழுது கொண்டிருந்த டிராக்டர் முன்பாக கை குழந்தையைப் பெற்ற தாயே வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அண்ணன்- தம்பி இடையே நிலவும் பூர்வீக நிலப்பிரச்சனை எத்தனை ஆண்டுகளானாலும் முடிவுக்கு வராது. நீதிமன்றத்திற்கே சென்றாலும் இருவரும் மனது வைத்தால் தான் தீர்வு காணமுடியும். இது போன்ற நிலப்பிரச்சனை ஒன்றை தான் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் சந்தித்து வந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் லாவே மாவ் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கிடையே பல ஆண்டுகளாக நிலப்பிரச்சனை நீடித்து வந்துள்ளது.

    இந்த சூழலில் தான், கடந்த ஞாயிற்றுக்கிழமை சகோதரர் ஒருவர் தங்களுடைய நிலத்தில் ஒரு பகுதியில் விவசாயம் மேற்கொள்வதற்காக பிரச்சனைக்குரிய நிலத்தை உழுத ஆரம்பித்தார். டிராக்டர் நிலத்தில் உழுது கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்ப்பாராத சமயத்தில், நிலத்தின் மற்றொரு உரிமையாளரின் மனைவி திடீரென தனது கையில் இருந்த குழந்தையை டிராக்டர் முன் வீசி எரிந்துவிட்டார். ஆனால் டிராக்டர் ஒட்டுநரோ ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தியதால் குழந்தைக் காப்பாற்றப்பட்டது.

    Also Read : மரணத்திற்கு பிறகு உயிர் எங்கு செல்கிறது?, மறுபிறப்பு என்பது உண்மையா? 

    நிலப்பிரச்சனையால் குழந்தையை பலிக்கொடுத்த முயன்ற தாயின் செயலை வீடியோ எடுத்த உள்ளூர்வாசி ஒருவர் இணையத்தில் பதிவிட்டார். அந்த வீடியோவில், “டிராக்டர் நிலத்தை உழுது கொண்டே வந்தது. அப்போது டிராக்டரை நோக்கி சென்ற தாய், தீடிரென குழந்தையின் டிராக்டர் டயர் முன்பாக தூக்கி எரிந்தார். அப்போது டிராக்டர் ஓட்டுநர் பிரேக் பிடித்துவிட்டார். உடனே குழந்தையை தூக்கி அந்த தாய் தொடர்ச்சியாக உறவினர்களுடன் சண்டையிட ஆரம்பித்தார். சுமார் 1 நிமிடத்திற்கு மேலான இந்த வீடியோதற்போது வைரலாகி வரும் நிலையில், ஒரு தாய் இது போன்ற காரியத்தை செய்யலாமா? நிலம் போனால் கிடைக்கும்? குழந்தையின் உயிர் மீண்டும் வருமா? இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்பது போன்ற கருத்துக்களை நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.



    மேலும் லாவே மாவ் கிராமம் கர்னல்ஞ்ச் காவல்நிலையத்திற்கு உட்பட்டுள்ள நிலையில் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது டிராக்டர் முன்னதாக குழந்தையை வீசிய தாயின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், காவல்துறை என்ன செய்கிறது? சட்டம் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா? நிலத்தகராறு பிரச்சனைக்குக் குழந்தை என்ன செய்யும்? என்பது போன்ற கேள்விகள் எழுந்தது. இந்நிலையில் தான், எஸ்பி கோண்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் தோமர், சோசியல் மீடியாவில் வைரலாகும் வீடியோவைப் பார்த்ததாகவும், இது குறித்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    தற்போது நெட்டிசன்களிடம் பேச்சுப்பொருளாக மாறியுள்ள இந்த வீடியோவை பார்க்கும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது. ஒருபோதும் பெரியவர்களின் பிரச்சனைக்காக குழந்தைகளின் உயிர்களைப் பணையம் வைக்காதீர்கள்? குழந்தைகள் தெய்வத்திற்கு சமமானவர்கள், மீண்டும் குழந்தை செல்வம் நமக்கு கிடைக்காது. எனவே இனி தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்யாதீர்கள் என்கின்றனர் சமூக மற்றும் குழந்தை நல ஆர்வலர்கள்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி