உத்தரப்பிரதேச மாநிலம், தனியார் பள்ளி (Harivansh Memorial Inter College) ஒன்றில், பொதுத்தேர்வுகளில் முறைகேடு செய்து தேர்ச்சியடைவது என்றும், விடைத்தாளில் நூறு ரூபாய் வைத்தால் போதும் நீங்கள் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் ப்ரவீன் மால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
”பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒன்றை சொல்கிறேன். பயப்படாமல் தேர்வு எழுதுங்கள். உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை அந்த தேர்வுத்தாளில் எழுதுங்கள். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் எனக்கு பழக்கமானவர்கள்தான். அவர்களைப் பார்த்து பயப்படாமல் கலந்தாலோசித்து தேர்வு எழுதுங்கள்.
தேர்வுத்தாளில் 100 ரூபாய் மட்டும் வைத்து விடுங்கள் தேர்ச்சி அடையலாம். தவறான பதில் எழுதினால் கூட 3 அல்லது 4 மதிப்பெண்கள் பெற்றுவிடலாம். ஜெய்ஹிந்த், ஜெய்பாரத்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அவரது வீடியோவை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் புகார் மையத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார் ஒரு மாணவர். இதன் காரணமாக தற்போது பள்ளி முதல்வர் ப்ரவீன் மாலி கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச இடைநிலைக் கல்வி வாரிய தேர்வுகள் மாநிலம் முழுவதும் இரண்டு நாட்களுக்கு முன்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also See...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.