Home » News » Trend

கோபத்தில் வீட்டை விட்டு போறேன் என்று மிரட்டிய மனைவி... மூக்கைக் கடித்துத் துப்பிய கணவன்...!

”காயமடைந்த சரோஜினி எந்த ஆபத்துமின்றி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்”

கோபத்தில் வீட்டை விட்டு போறேன் என்று மிரட்டிய மனைவி... மூக்கைக் கடித்துத் துப்பிய கணவன்...!
மாதிரி படம்
  • Share this:
உத்திரபிரேதசத்தில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சண்டை மூக்கைக் கடித்துத் துப்பும் சம்பவம் வரை சென்றுள்ளது.

உத்திரபிரேதசம் மாநிலத்தின் முதியா கிராமத்தை சேர்ந்தவர் 34 வயதான சரோஜினி தேவி. இவருக்கும் இவரது கணவர் மூல்சந்த் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வருவதால் கணவர் பிரிந்து 6 மாதக்காலம் பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார்.

இதன்பின் கிராம பஞ்சாயித்தினர் இருவரையும் சமதானப்படுத்தி சேர்ந்து வாழும்படி அறிவுறுத்தி கடந்த புதன்கிழமை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். நேற்று மீண்டும் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.


கணவன் மீது ஆத்திரமடைந்த சரோஜினி தேவி வீட்டை விட்டு போவதாக மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூல்சந்த் மனைவியின் மூக்கைக் கடித்துத் துப்பியுள்ளார். சரோஜினியில் அலறல் சத்தம் கேட்டு அவரை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மூல்சந்த் சட்டப்பிரிவு 326-ன் கீழ் (தானாக முன் வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்துவது) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீம்கான் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.













First published: May 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading