உத்தரபிரதேசத்தின் ஃபரூக்காபாத்தில் உள்ள ஃபதேகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள 1,100 கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
FSSAI சான்றிதழில், "இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் நிறுவப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, ஃபதேகர் மாவட்ட சிறைச்சாலை, ஃபரூக்காபாத் உணவு உரிமை வளாகம் எனச் சான்றளிக்கப்பட்டுள்ளது" என்று எழுதி சிறந்த உணவுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. அறிக்கையைத் தொடர்ந்து 5-நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டது. இது ஆகஸ்ட் 18, 2024 வரை செல்லுபடியாகும்.
மூன்று கட்ட தர நிர்ணய சோதனைக்கு பிறகு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு இதற்கான பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறை நிர்வாகி தெரிவித்தார்.
5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது எப்படி?
சிறைச்சாலை தூய்மை, உணவின் தரம், அரிசி, கோதுமை மற்றும் பருப்புகளை FSSAI- சான்றளிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் இருந்து வாங்குதல் மற்றும் நன்கு உடையணிந்த ஊழியர்கள். சிறையில் சைவ உணவு மட்டுமே வழங்கப்படுவது உள்ளிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு .சோதனைகள் செய்யப்பட்டது.
இனி பார்வையற்றோர் கூட விண்வெளி அதிசியங்களின் புகைப்படத்தை உணர முடியும் - நாசா புதிய முயற்சி
சிறை அதிகாரியின் கூற்றுப்படி, அவர்கள் கைதிகளுக்கு பல்வேறு வகையான சுவையான சுத்தமான உணவுகளை வழங்குகிறார்கள். இதில், உளுந்து, சுண்டல், பருப்பு, பயிர் வகைகள் கைதிகளுக்கு சுழற்சி அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கைதிகள், பல்வேறு உணவகங்களில் காணப்படுவது போல் சுகாதாரமான நிலையில் ஏப்ரன் அணிந்து உணவு சமைக்கின்றனர். உணவு சமைப்பவர்கள், நகங்கள் மற்றும் முடி வெட்டப்படுவதை உறுதி செய்கின்றனர்.
சிறையில் ரொட்டி இயந்திரங்கள், மாவு பிசையும் இயந்திரங்கள் மற்றும் காய்கறி வெட்டும் இயந்திரங்கள் போன்ற புதிய சமையல் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
உணவுகள்:
காலை உணவாக, இரண்டு நாட்கள் சுண்டல் வழங்கப்படுகிறது. இரண்டு நாட்களில் பாவ்-ரொட்டி வழங்கப்படுகிறது. 3 நாட்களில் டாலியா (கஞ்சி) வழங்கப்படுகிறது. வெவ்வேறு உணவுகளில் வெவ்வேறு வகையான பருப்புகள் (பருப்பு வகைகள்) வழங்கப்படுகின்றன என்று ஜெயிலர் கூறினார்.
எனக்கும் எடிட் ஆக்ஸஸ் கொடுங்களேன்' - ட்விட்டரிடம் குசும்பு செய்த கூகுள் இந்தியா...
முதல், மூன்றாவது மற்றும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், மாலையில் பூரி, காய்கறி மற்றும் அல்வா வழங்கப்படுகிறது. இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை, கதி-சாவல் பரிமாறப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் சமைத்த உணவு சரிபார்க்கப்பட்டு பின்னர் கைதிகளுக்கு வழங்கப்படுகிறது. கைதிகள் தங்கள் பசி ஆற சாப்பிடுவதை உறுதி செய்கிறது.
தற்போது, மாவட்ட சிறையில் 1,144 கைதிகள் உள்ளனர். இவர்களுக்கான சமையல்காரர்களோடு கைதிகளும் சேர்ந்து செய்கின்றனர். அவர்களுக்கும் சமையல் கலையில் சிறந்த பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.