Home /News /trend /

கடவுள் இந்திரன் மேல் புகார் அளித்த விவசாயி - மழை பெய்யாததால் ஆத்திரம்!

கடவுள் இந்திரன் மேல் புகார் அளித்த விவசாயி - மழை பெய்யாததால் ஆத்திரம்!

விவசாயி சுமித்குமார் யாதவ்

விவசாயி சுமித்குமார் யாதவ்

மழைகளின் கடவுள் என நம்பப்படும் இந்திரன் மேல் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி புகார் மனு அளித்துள்ளார்.

    சுமித் குமார் யாதவ் என்ற விவசாயி உத்தரபிரதேசம் கோண்ட் மாவட்டத்தில் உள்ள ஜாலா கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த பகுதி பொதுமக்களுக்கான குறைதீர்க்கும் நாள் நடைபெற்றது.

    வழக்கமாகக் குறைதீர்க்கும் நாளில் மக்களுக்குத் தேவையான வசதிகள் பற்றிய புகார்கள் வரும் ஆனால் இங்குக் கொஞ்சம் வித்தியாசமாக சுமித் குமார் யாதவ் கடவுள் இந்திரன் மேல் போதுமான அளவு மழை தரவில்லை எனப் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகார் கடிதத்தில் மழை குறைவால் அந்த மாவட்டத்தில் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றி எழுதியுள்ளார். கடந்த சில மாதங்களாக போதுமான அளவு மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

    அதனால் பஞ்சம் வரும் நிலைமைக்கு ஆளாகியுள்ளோம். மேலும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், விலங்குகள் மழை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

    இப்படி மழை இல்லாமல் பஞ்சம் வரக் கடவுள் இந்திரன் தான் காரணம், அதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்கக் கோரி அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்து கடவுளான இந்திரனை மழைக்கான கடவுள் என்று அழைப்பார்கள். மழை வேண்டி இந்திரனிடம் வழிபாடுகள் நடத்துவது ஐதீகம். ஆனால் இவர் இந்திரன் மேல் புகார் கொடுத்து தன்னுடைய சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    அந்த புகாரை வருவாய்த் துறை அதிகாரி பெற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பினார் என்று கூறப்படுகிறது.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Farmer, Funny men

    அடுத்த செய்தி