Home /News /trend /

மணமேடையில் மணப்பெண்ணுக்கு மாலை அணிவித்த மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மணமேடையில் மணப்பெண்ணுக்கு மாலை அணிவித்த மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

காட்சி படம்

காட்சி படம்

மணமக்களில் யாரேனும் ஒருவர் தன் துணையின் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நாடெங்கிலும் நடைபெற்று வருகின்றன.

இப்போதெல்லாம் திரைப்படங்களில் பார்ப்பதை போல திருமண நிகழ்வுகளில் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாக மாறியுள்ளது. திடீரென திருமணத்தை நிறுத்தும் மணமகன் அல்லது மணமகள், திடீரென கோபம் கொள்ளும் மணமக்கள் என இதெல்லாம் அவ்வபோது கேள்விப்படும் செய்திகளாக மாறிவிட்டன.

அப்படியொரு சம்பவம் தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. இங்கு குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ மணமக்கள் திருமணத்திற்கு தயாராகி கொண்டிருந்தனர். மணமகன், மணமகளின் கழுத்தில் மாலையை அணிவித்தார். இதையடுத்து, மணமகனுக்கு மாலை அணிவிக்க தயாரான மணமகளுக்கு திடீரென கோபம் வந்து விட்டது. இதனால், அடுத்தடுத்து இரண்டு முறை மணமகனுக்கு அறை விட்ட அவர், உடனடியாக மணமேடையை விட்டு வெளியேறினார்.

இதற்கிடையே, இரு குடும்பத்தினரும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதில் சமாதானம் ஏற்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.



also read : பெண் பயிற்சியாளரை பலமுறை தாக்கிய டால்பின்.. கேமராவில் சிக்கிய 'திக் திக்' நிமிடங்கள்!

தமிழகத்திலும் இப்படித்தான்…

மணமக்களில் யாரேனும் ஒருவர் தன் துணையின் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நாடெங்கிலும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இதேபோன்ற சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. பண்ருட்டியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பெற்று, திருமணம் கடந்த ஜனவரி 20ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், ஜனவரி 19ம் தேதி நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, மணமகள் அவரது உறவினர்களோடு நடனமாடியபடி மேடைக்கு வந்தார். ஆனால், மணமகள் நடனமாடிய விதம் மணமகனுக்குப் பிடிக்கவில்லை. இதனால், மணமகளுடன் அவர் வாக்குவாதம் செய்ய தொடங்கினார்.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், மணப்பெண்ணின் கன்னத்தில் மணமகன் அறை விட்டதாகத் தெரிகிறது. இதை தொடர்ந்து மணமகளும் பதிலுக்கு திருப்பி அடித்தார். இந்த சண்டையை பார்த்த மணமகளின் தந்தை ஆத்திரமடைந்தார். உடனடியாக திருமணத்தை நிறுத்திய அவர், நிச்சயிக்கப்பட்ட அதே தேதியில் உறவுக்கார பையன் ஒருவருக்கு தனது மகளை திருமணம் செய்து வைத்தார்.


also read : இவங்க தான் உலகிலேயே மிக உயரமான குடும்பம்.. கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பேமிலி!

வன்முறைகளுக்கு காரணம் என்ன?

பொதுவாக திருமண நிகழ்வில் மணமக்கள் திடீரென கோபம் கொள்வதைப் போல தெரிந்தாலும், அதன் பின்னணியில் பல்வேறு காரணங்களும் இருக்கத் தான் செய்கின்றன. சில சமயம், பெற்றோரின் கட்டாயத்தின் பேரில், விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொள்ளும் ஆண் அல்லது பெண், இதுபோல வன்முறையை நிகழ்த்துவதன் மூலமாக திருமணத்திற்கு தடை போடுகின்றனர். சிலர் எதிர்பாராத காரணங்களுக்காக திடீரென கோபம் கொண்டு வன்முறையில் இறங்கி விடுகின்றனர்.

கருத்து வேறுபாடுகள் ஏதேனும் இருப்பின் முன்கூட்டியே அதைப் பேசி தீர்வு காண்பது அல்லது பிரிந்து செல்வது என்பது இரு தரப்பினருக்கும் தேவையற்ற வருத்தங்களை தவிர்க்க உதவியாக இருக்கும்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Viral Video

அடுத்த செய்தி