ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கோக்கைன்னுக்கு அடிமையாவது போல கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதில் அடிமையாகும் மக்கள்: MIT வெளியிட்ட ஆய்வறிக்கை!

கோக்கைன்னுக்கு அடிமையாவது போல கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதில் அடிமையாகும் மக்கள்: MIT வெளியிட்ட ஆய்வறிக்கை!

மாதிரி படம்

மாதிரி படம்

ஆன்லைன் ஆப் வழங்கும் சலுகைகள் காரணமாகவே கிரெடிட் கார்டு பேமெண்ட்டுகள் நாட்டில் அதிகரித்து வருகின்றன.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

இன்றைய காலகட்டத்தில் கிரெடிட் கார்டு பயன்பாடு என்பது மிகவும் சாதாரணமாக மாறிவிட்டது. மேலும், ஆன்லைன் ஆப் வழங்கும் சலுகைகள் காரணமாகவே கிரெடிட் கார்டு பேமெண்ட்டுகள் நாட்டில் அதிகரித்து வருகின்றன. அதிலும் பெரும்பாலான மக்கள் எந்த பொருட்களை பார்த்தாலும் வாங்க வேண்டும் என்ற உணர்வினை இந்த பேமெண்ட்டுகள் உருவாக்கியுள்ளன. அந்த வகையில் ஷாப்பஹாலிக் பிரச்சனையுடன் போராடி வரும் பலருக்கும் பொருட்களை வாங்குவது என்பது ஒரு போதை என்கிறது ஒரு ஆய்வு.

ஒவ்வொரு பர்ச்சேஸ்களிலும் அதிக செலவு செய்வது அவர்களுக்கு கோக்கைன் சாப்பிடுவதால் ஏற்படும் உணவு போன்றே இருக்கும் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த பர்ச்சேஸ்கள் அவர்களின் மூளைக்கு கோகோயின் போன்ற ‘வெற்றியை’ தருவதால், ஷாப்பஹாலிக் நபர்கள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கு அடிமையாகலாம் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) நடத்திய ஆய்வில், கிரெடிட் கார்டு மூலம் பர்ச்சேஸ் செய்யும் போது, கோக்கைன் மற்றும் ஆம்பெடமைன் போன்ற போதை மருந்துகள் மூளையில் ஏற்படுத்தும் வேதியியல் எதிர்வினைகள் உணர்வை தூண்டுகிறது என்பது தெரிய வந்துள்ளது. பணத்திற்குப் பதிலாக கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் போது மக்கள் அதிக செலவு செய்கிறார்கள் என்பதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உலகளாவிய தொற்றுநோயால் பண பரிவர்த்தனைகள் மூலம் வைரஸ் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் காரணமாக தற்போது அனைத்து பகுதிகளிலும் கார்டு பேமெண்ட்டுகள் அதிகரித்ததும் இதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

இதுதவிர பல்வேறு வகையான ஷாப்பிங் கிரெடிட் கார்டுகள் சலுகைகள் மூலம் மக்களின் ஆசைகளைத் தூண்டக்கூடும் என்றும் கண்டறியப்பட்டது. அதுவே அவர்களை ஷாப்பஹாலிக்காக மாற்றுகிறது. எரிபொருளை வாங்க கார்டுகளை பயன்படுத்துவதை விட உணவகங்களில் கார்டுகளை பயன்படுத்தும் போது மக்கள் அதிகம் செலவு செய்வதாக தெரிகிறது. கிரெடிட் கார்டுகள், செலவினத்தைப் பெரிதும் பொருட்படுத்தாமல், மக்களை ஷாப்பிங் செய்ய தூண்டுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

அதுவே பணத்தைப் பயன்படுத்தி செலவு செய்வது மூளையில் ‘வெகுமதி நெட்வொர்க்குகளை’ அதாவது ஆபர்கள் ஆசையை தூண்டாது என்று ஆய்வு முடிவு செய்துள்ளது. இது குறித்து ஆய்வின் இணை ஆசிரியரான பேராசிரியர் டிராஸன் ப்ரெலெக் கருத்துப்படி, மூளையில் உள்ள வெகுமதி நெட்வொர்க்குகள் கிரெடிட் கார்டு வாங்குதல் போன்ற அனைத்து வகையான விஷயங்களால் செயல்படுத்தப்படுகின்றன. ஏனெனில் ஒரு பிளாஸ்டிக் கார்டை உங்கள் கையில் வைத்திருக்கும் செயல் சுவாரஸ்யமான ஷாப்பிங் அனுபவத்துடன் தொடர்புடையது.

Also read... Explainer: 'மும்பை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்' சச்சின் வாஸ் யார்?

இந்த ஆய்வுக்காக பங்கேற்பாளர்களின் மூளை ஸ்கேன் மூலம், அன்றாட தயாரிப்புகளை பர்ச்சேஸ் செய்ய பணம் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தியவர்கள் மீது ஆய்வு செய்யப்பட்டனர். ஆய்வின் முடிவுகள் journal Scientific Reports-ல் வெளியிடப்பட்டன. மேலும் சமீபத்தில் அதிபர் ரிஷி சுனக் கூறியதாவது, "தொற்றுநோய் உலகம் முழுவதையும் தாக்கியதால், தொடர்பு இல்லாத கட்டணத்திற்கான எழுச்சி உருவாகியுள்ளது.

எனவே, கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க டிஜிட்டல் கட்டண முறைகள் அதிகரித்துள்ளன. இங்கிலாந்தில், தொடர்பு இல்லாத கார்டு லிமிட்டை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சிங்கிள் பேமெண்ட் இந்த ஆண்டு £ 100 ஆக உயரும் என்று தெரிவித்துள்ளார். வங்கி வர்த்தக அமைப்பான யுகே ஃபைனான்ஸின் சமீபத்திய தரவுகளின்படி, 2020 அக்டோபரில் தொடர்பு இல்லாத கொடுப்பனவுகளின் மொத்த மதிப்பு அதற்கு முந்தைய வருடத்தின் அதே மாதத்துடன் ஒப்பிடும்போது, 16 சதவீதம் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Credit Card