• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 15 மாதங்களாக தண்ணீரில் கிடந்த ஐபோன்... உரிமையாளருக்கு இன்ப அதிர்ச்சி...!

15 மாதங்களாக தண்ணீரில் கிடந்த ஐபோன்... உரிமையாளருக்கு இன்ப அதிர்ச்சி...!

ஐபோன்

ஐபோன்

  • News18
  • Last Updated :
  • Share this:
    யூடியூப் சேனல் நடத்தி வரும் பென்னட் என்பவர், ஆற்று தண்ணீரின் அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஐபோன், இயங்கும் நிலையில் இருந்ததால், போனின் உரிமையாளருக்கு இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது.

    தற்போதைய ஸ்மார்ட்போன் உலகில், தண்ணீரில் போன் விழுந்துவிட்டாலே அது அவ்வளவுதான் என்று அனைவரும் நினைக்கத்தோன்றும் வகையில், பலருக்கும் சில அனுபவங்கள் கிடைத்திருக்கும். தண்ணீரில் விழுந்த போனை தனித்தனியாக கழற்றி காய வைத்து மறுபடியும் பயன்படுத்தினாலும் அது சில சிக்கல்களை தந்துகொண்டே இருக்கும்.

    இதனாலே, வாட்டர் ஃப்ரூப் போன்களை பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்தின. அதில், ஆப்பிள் நிறுவனமும் ஒன்று. இந்த நிலையில், 15 மாதங்களாக தண்ணீரில் கிடந்த ஐபோன் மீண்டும் இயங்கியுள்ள சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

    யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் மைக்கேல் பென்னெட் என்பவர், தனது சேனலில் தண்ணீருக்கு அடியில் கிடைக்கும் அரிய வகை பொருட்கள் குறித்து வீடியோ எடுத்து பதிவிடுவார். இவரது சேனலை சுமார் 8 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

    தனது சேனலுக்காக பென்னட் மேற்கொண்ட ஒரு முயற்சி எங்கோ வசித்த ஒரு பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. தெற்கு கரோலினாவில் உள்ள எடிஸ்டோ ஆற்றில் பென்னட் ஒரு தேடுதலை தொடர்ந்தார். அப்போது,தண்ணீருக்கு அடியில் இருந்து ஐபோன் ஒன்றினை கண்டறிந்துள்ளார். அந்த போன் எத்தனை நாட்கள் அந்தத் தண்ணீர் இருந்திருக்கும், இது வேலை செய்யுமா? செய்யாதா? என குழப்பத்துடன் அந்த போனை எடுத்துச் சென்றுள்ளார்.

    வீட்டிற்கு சென்று அந்த போனிற்கு சார்ஜ் போட்டிருக்கிறார். அவர் ஆச்சரியப்படும் வகையில் போன் வேலை செய்திருக்கிறது. இதனை நம்ப முடியாத அவர், அந்த போனை எப்படியாவது உரிய நபரிடம் கொடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார். ஆனால், அதில் சிக்கல் இருந்துள்ளது. போனை ஆன் செய்ததுமே பாஸ்வேர்ட் கேட்டுள்ளது.

    இதனால் மாற்று வழியை யோசித்த பென்னட், போனில் இருந்த சிம் கார்டை எடுத்து, உரிமையாளரின் நம்பரை எப்படியோ கண்டுபிடித்து, ஐபோன் பற்றி பேசியுள்ளார்.
    இதனை கேட்டதும் ஐபோனின் உரிமையாளர் எரிக்கா இன்ப அதிர்ச்சியில் உறைந்தார்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது அந்த ஆற்றில் ஐபோன் தவறிவிழுந்துவிட்டதாக கூறியிருக்கிறார். சுமார் 15 மாதங்களாக அந்த ஐபோன் தண்ணீருக்குள் இருந்தது என்ற தகவல் அப்போதுதான் மைக்கலுக்கு தெரியவந்தது.

    இறந்துபோன தனது தந்தை உடனான உரையாடல்கள் தொலைந்த போனில் தான் இருந்தது. போன் தொலைந்ததும் சோகத்தின் உச்சிக்கே சென்றேன் என்று எரிக்கா தான் அடைந்த சோகத்தையும் வெளிப்படுத்தினார். உடனடியாக பாஸ்வேர்டை பெற்ற பென்னட், ஐபோனில் இருந்த தகவல்கள் அனைத்தையும் எரிக்காவின் புதிய போனிற்கு அனுப்பியுள்ளார்.

    விரைவில் ஐபோனை எரிக்காவிடம் கொண்டு சேர்ப்பேன் என்று பென்னட் கூறியுள்ளார். தண்ணீரில் இருந்தாலும் எதுவும் ஆகாது என்று ஐபோன் பற்றி ஆப்பிள் விளம்பரம் செய்து வந்தாலும், 15 மாதங்கள் என்பது மிக நீண்ட காலகட்டம் என்பதால் ஐபோனின் மீதான மதிப்பும் பலரிடம் அதிகரித்துள்ளது.

    Video:



    Also See...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: