மருத்துவரைக் கடித்தேன்' 10 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூர்ந்த பெண்... டிவிட்டரில் சுவாரஸ்யம்!

மருத்துவரைக் கடித்தேன்' 10 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூர்ந்த பெண்... டிவிட்டரில் சுவாரஸ்யம்!

மாதிரி படம்

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு ஏற்பட்ட எதிர்பாராத சம்பவம் ஒன்று அடிக்கடி ஞாபகத்துக்கு வந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மிகவும் துன்புறுத்தக்கூடிய பிரச்சனைகளுள் ஒன்று பல் வலி. பல் சொத்தை, ஈறு பிரச்சனை உள்ளிட்டவைகளுக்காக மருத்துவமனைக்கு சென்றால், அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு குறைந்தது சில மணி நேரங்கள் ஆகும். அனுபவமிக்க மருத்துவர்கள் சிகிச்சை அளித்தால், அந்த பிரச்சனைகளால் ஏற்படும் வலி பெரிதாக இருக்காது. இல்லையென்றால் கொஞ்சம் மோசமான நிலைமையை நாம் சந்திக்க வேண்டி வரும். அந்தமாதிரியான சூழல்களில் எதிர்பாராமல் நடைபெறும் சில சம்பவகள் பின்னாளில் மிகவும் காமெடியாக தெரியும்.

அப்படியான சந்தர்ப்பம் ஏற்பட்ட பெண் ஒருவர், தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். 29 வயதான செல்ஷி (Chelsey), வடக்கு கலிஃபோர்னியாவில் வசித்து வருகிறார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு ஏற்பட்ட எதிர்பாராத சம்பவம் ஒன்று அடிக்கடி ஞாபகத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து, தனக்கு நேர்ந்த அந்த சந்தர்ப்பத்தை இணையவாசிகளுடனும் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், 10 ஆண்டுகளுக்கு முன்பு பற்களின் வேரில் பிரச்சனை இருந்ததால் பல் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சைக்காக சென்றுள்ளார். செல்ஷியை பரிசோதித்த மருத்துவரும் அவருக்கு ஈறில் பிரச்சனை (Root canal) இருப்பதை உறுதி செய்து, வேர் சிகிச்சை செய்ய பரிந்துரைத்துள்ளார்.

அதற்கு முன்னதாக பற்களில் தசைகள் இலகுவாக இருப்பதற்காக வாலியம் (Valium) என்ற மருந்தை பயன்படுத்துமாறு கொடுத்தனுப்பியுள்ளார். வாலியம் மருந்து அதிக டோஸ் கொண்ட மருந்து. செல்ஷிக்கு 19 வயது என்பதால், வாலியம் மருந்தை பாதியளவில் மட்டும் பயன்படுத்துமாறு செல்ஷியின் தாயிடம் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். மருத்துவரின் ஆலோசனையை புரிந்துகொள்ளாத செல்ஷியின் தாய், தனது மகளுக்கு முழு வாலியம் மருந்தையும் கொடுத்துள்ளார்.

Also read... ஒவ்வொரு இந்தியரும் ஆண்டுக்கு 5 கிலோ உணவை வீணாக்குகின்றனர் - ஐநா ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

மருந்து எடுத்துக்கொள்ளும் வரை நடைபெற்ற நிகழ்வுகள் தனக்கு ஞாபகம் இருந்ததாகவும், அதற்கு பின்னர் ஏற்பட்ட சம்பவங்கள் ஞாபகம் இல்லை என தெரிவித்துள்ள செல்ஷி, மயக்க நிலையில் தான் இருந்தபோது செய்த விஷயங்களை தாய் பின்னர் கூறியபோது ஷாக்காகிவிட்டதாக தெரிவித்துள்ளார். அதாவது, செல்ஷிக்கு வாலியம் மருந்து கொடுத்த பின்னர், மருத்துவரிடம் மீண்டும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மருத்துவர் முன்பு சீட்டில் அமர்ந்த செல்ஷி, அவரை நோக்கி சென்றுள்ளார். அப்போது, செல்ஷியின் வாயை பிடிக்க முயற்சித்தபோது, மருத்துவரை பலமாக கடித்து வைத்துள்ளார்.

இதனால் மருத்துவர் அதிர்ச்சியடைந்தாலும், ஒருவழியாக பற்களில் சில கிரவுன்களை வைத்து அவர் முறையாக சிகிச்சை அளித்து அனுப்பி வைத்துள்ளார். மயக்கம் தெளிந்த பின்னர், இதனைக் கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்த செல்ஷி, மீண்டும் அந்த மருத்துவரிடம் ஒருபோதும் செல்லக் கூடாது என முடிவெடுத்ததாக நகைச்சுவையாக ஞாபகத்தை பகிர்ந்துள்ளார். செல்ஷியின் செயல் நெட்டிசன்களுக்கும் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: