ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

60 கிலோ எடையை அதிரடியாக குறைத்த பெண்: வாயை பிளக்கும் நெட்டிசன்கள்!

60 கிலோ எடையை அதிரடியாக குறைத்த பெண்: வாயை பிளக்கும் நெட்டிசன்கள்!

60 கிலோ எடையை குறைத்த பெண்

60 கிலோ எடையை குறைத்த பெண்

கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக உணவுகளை உட்கொண்டதால், சாராவுக்கு அதிக அளவில் எடை கூடியுள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Internationa, Indianew orleansnew orleans

  அமெரிக்காவை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் அனைவரையும் அசர வைக்கும் விதத்தில் அறுவைசிகிச்சை மூலம் மிகப்பெரும் உருமாற்றத்தை நிகழ்த்தி காட்டியுள்ளார்.

  இன்றைய காலங்களில் பல்வேறு மக்களும் உடல் எடையை குறைக்க என்னென்னவோ வழிகளை பின்பற்றி வருகின்றனர். இருந்தாலும் அவர்கள் நினைத்த விதத்தில் உடல் எடையை குறைப்பது அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை. ஆனால் அமெரிக்காவை சேர்ந்த சாரா லாக்கெட் என்ற பெண் 62 கிலோ எடையை குறைத்து மிகப் பெரும் ஆச்சரியத்தை நிகழ்த்தியுள்ளார்.

  ஸ்ரீமயீ சௌத்ரி என்பவரால் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த புகைப்படத்தில் அமெரிக்காவில் வசிக்கும் சாரா லாக்கெட்டின் எடை குறைப்புக்கு முன் மற்றும் எடை குறைப்பிற்கு பின்னரான புகைப்படம் பதிவேற்றப்பட்டுள்ளது. சாரா லாக்கெட்டுக்கு உடல் பருமன் அதிகமாக இருந்த காரணத்தினால் பலரும் அவரை கிண்டல் செய்துள்ளனர். தன்னுடைய குழந்தையுடன் விளையாடும்போது கூட பல்வேறு விதமான அவமானங்களுக்கு உள்ளாகியுள்ளார். இதனால் தன்னைக் கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உடல் எடையை குறைக்க முடிவு செய்துள்ளார்.


  காஸ்டிரிக் ஸ்லீவ் சர்ஜரி என்னும் சிகிச்சை மூலம் 60 கிலோ எடையை குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். “ஒரு முறை என் மகனுடன் சறுக்கு மரத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது நானும் என் மகனும் ஒன்றாக சறுக்கி கொண்டு செல்ல வேண்டும் என்று என் மகன் விரும்பினான். ஆனால் நாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்ததும், அந்த இடம் எங்களுக்கு போதுமானதாக இல்லை. மேலும் சறுக்கு மரத்தின் வளைவில் என்னுடைய உடல் பருமன் எடையும் காரணமாக நான் சிக்கிக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்

  9 குழந்தைகளுடன் சைக்கிளில் பயணித்த நபர் - வைரலாகும் வீடியோ.!

  “என்னுடைய முந்தைய புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தையும் பார்த்து பல்வேறு நபர்கள் ஆச்சரியமடைகின்றனர். ஆம்! நான் மிகப்பெரும் மாற்றத்தை செய்துள்ளேன். அனைவரும் தங்கள் தோற்றத்தின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். நான் என்னுடைய புகைப்படத்தை எந்தவித மேக்கப்பும் இன்றி இருப்பதை அப்படியே பதிவிட்டுள்ளேன். என்னுடைய இந்த மாற்றத்தை நிகழ்த்த கிட்டத்தட்ட எனக்கு பத்து மாதங்கள் ஆனது. இடது பக்கம் இருக்கும் என்னுடைய முந்தைய புகைப்படத்தில் என்னுடைய எடையானது 253lbs. வலது பக்கத்தில் உள்ள என்னுடைய தற்போதைய புகைப்படத்தை எடுத்தபோது என்னுடைய எடை 128lbs “ என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

  அவருடைய கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக உணவுகளை உட்கொண்டதால், சாராவுக்கு அதிக அளவில் எடை கூடியுள்ளது. மேலும் அதிக ரத்த அழுத்தமும் நீரிழிவு நோயும் இருப்பதால் உடல் எடை அதிகரித்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 3000 கலோரிகள் வரை அவர் உணவுகளை உட்கொள்வாராம்.

  ’எனக்கு யாராவது வேலை கொடுங்க...’ - உருக்கமான கோரிக்கை வைத்த அமெரிக்க வாழ் இந்தியர்.!

  நியூ ஆர்க் போஸ்ட் என்ற பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில் ”செப்டம்பர் 2021ல் நான் என்னுடைய சிகிச்சையை துவங்கினேன். அதிர்ஷ்டவசமாக என்னுடைய காப்பீட்டு நிறுவனத்தால் 98 சதவீத கட்டணங்கள் மருத்துவமனைக்கு செலுத்தப்பட்டது. சிகிச்சையின் போது எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. அதே சமயத்தில் உற்சாகமாகவும் இருந்தது. இதன் பின்னரான காலங்களில் வாழ்க்கை முறையிலும், உணவு பழக்க வழக்கங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று எனக்கு நன்றாக தெரிந்து விட்டது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Trending, Trending News, Viral News