ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மைக்கிற்கு திடீரென ஆணுறை மாட்டிய பெண் நிருபர்... எல்லாம் ஒரு பாதுகாப்புக்கு தான் என விளக்கம்

மைக்கிற்கு திடீரென ஆணுறை மாட்டிய பெண் நிருபர்... எல்லாம் ஒரு பாதுகாப்புக்கு தான் என விளக்கம்

தொலைக்காட்சி நிருபர் கைலா கேலர்

தொலைக்காட்சி நிருபர் கைலா கேலர்

புயல் குறித்து செய்தி வழங்கிய பெண் நிருபர் திடீரென்று மைக்கிற்து ஆணுறை மாட்டிவிட்ட சுவாரசிய சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaFloridaFlorida

  அமெரிக்காவில் உள்ள கடற்கரை மாகாணங்கள் ஆண்டுதோறும் ஹரிக்கேன் எனப்படும் பெரும் சூறாவளிப் புயல் தாக்குவது வழக்கம். அதேபோல் அந்நாட்டின் புளோரிடா மாகாணத்தைக் கடந்த புதன்கிழமை தாக்கிய இயான் புயல் அமெரிக்காவை உருக்குலைத்த மிக அழிவுகளுமான புயலின் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

  புளோரிடாவை தாக்கிய புயலால் மணிக்கு 241 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்துள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்தது. மேலும் புயலின் தாக்கத்தினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளது. பேரழிவை ஏற்படுத்திய இந்த புயலால் புளோரிடா நிலைகுலைந்துள்ள நிலையில், அந்நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான புயல் பாதிப்பு இது என அதிபர் ஜோ பைடன் கவலை தெரிவித்துள்ளார்.

  இந்த புயலின் கோர காட்சிகள் இணையத்தில் வீடியோக்களாக உலாவந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த புயல் செய்திகளை களத்தில் இருந்து உலகிற்கு வழங்கிய பெண் நிருபர் செய்த செயலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்நாட்டின் NBC தொலைக்காட்சியில் செய்தியாளராக கைலா கேலர் என்பவர் பணியாற்றி வருகிறார்.

  இவர் புளோரிடாவில் இயான் புயலை கவர் செய்து செய்தி வழங்கிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென தனது பாக்கெட்டில் இருந்து ஆணுறையை எடுத்து மைக்கில் மாட்டினார். இவர் என்ன செய்கிறார் என அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்த நிலையில், மழையில் மைக் நனைந்து விடக் கூடாது என்பதால் இதை நான் செய்தேன் என விளக்கம் அளித்துள்ளார் கைலா.

  மைக் வீணாகிப்போனால் என்னால் தொடர்ந்து செய்திகளை தர முடியாது என்பதற்காக தான் நான் இதை செய்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மைக்கிற்கு ஆணுறையை மாட்டி அதற்கு கைலா விளக்கம் அளிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Condom, Cyclone, USA, Viral Video