ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கால் வலிக்காக ஹாஸ்பிட்டல் போன பெண்ணுக்கு 48 மணி நேரத்தில் குழந்தை பிறந்த வினோதம்

கால் வலிக்காக ஹாஸ்பிட்டல் போன பெண்ணுக்கு 48 மணி நேரத்தில் குழந்தை பிறந்த வினோதம்

மாதிரி படம்

மாதிரி படம்

23 வயதான பெண்ணுக்கு, குழந்தை பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் தான் கர்ப்பமாக இருந்ததையே கண்டுபிடித்துள்ளார். கர்ப்பமாக இருக்கும் பெண்மணிகளுக்கு அறிகுறிகளைக் காட்டாதா என்ற கேள்வி எழுகிறது?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • New Delhi, India

    ஏதோ ஒரு விஷயத்தைத் தேட போய், நீண்ட நாட்களாக நாம் மறந்து போயிருக்கும் ஆனால் பொக்கிஷமாக இருக்கும் வேறு ஏதோ ஒரு விஷயம் கிடைத்திருக்கும். இது பல்வேறு விஷயங்களில் நம் வாழ்க்கையோடு இணைந்திருக்கும். அதேபோல உடல் நலக் கோளாறு, வயிற்றுவலி அல்லது தலைவலி என்று மருத்துவரிடம் செல்லும் பொழுது, நமக்கு தெரியாத ஒரு நோயோ குறைபாடோ கண்டறியப்பட்ட கதைகளும் உண்டு. அதேபோல மருத்துவரிடம் வேறொரு பிரச்சனைக்கு ஆலோசனை பெற சிகிச்சைக்கு செல்லும் வரை, ஒரு பெண்ணுக்கு தான் கர்ப்பமாக இருந்ததே தெரியவில்லை. கால்களில் வீக்கமாக இருக்கிறது என்று மருத்துவரிடம் சென்று இருக்கிறார். அப்போது பெண்ணுக்கு வாழ்நாளுக்கான அதிர்ச்சியும் ஆச்சரியமும் கிடைத்திருக்கிறது.

    23 வயதான பெண்ணுக்கு, குழந்தை பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் தான் கர்ப்பமாக இருந்ததையே கண்டுபிடித்துள்ளார். கர்ப்பமாக இருக்கும் பெண்மணிகளுக்கு அறிகுறிகளைக் காட்டாதா என்ற கேள்வி எழுகிறது?

    பேய்ட்டன் ஸ்டோர் என்ற பெண்மணி அமெரிக்காவின் ஒமாஹா நகரத்தில் ஆசிரியையாக பணிபுரிகிறார். சமீபத்தில் தான் இந்த ஆசிரியப் பணியில் புதிதாக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வயது 23. பொதுவாக ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்றால் குழந்தை உருவான சில நாட்களில் இருந்தே அதற்கான அறிகுறிகள் தென்பட்டுவிடும். காலையில் எழுந்தவுடன் தலை சுற்றுவது, வாந்தி, குமட்டல் உணர்வு, என்று இந்த அறிகுறிகள் பெரும்பாலானருக்கு ஏற்படும், சிலருக்கு தோன்றாது. இருப்பினும், குழந்தை வளர வளர கர்ப்பமாக இருப்பது கண்டிப்பாக தெரிந்துவிடுமே!

    ஆனால் இவருக்கு அவ்வப்போது சோர்வாக இருப்பதை மட்டுமே உணர்ந்துள்ளார். இதை தவிர்த்து வேறு எந்த அறிகுறியும் இல்லையாம். அதுமட்டுமில்லாமல் இவர் புதிதாக சேர்ந்த வேலைதான் இந்த சோர்வுக்கு காரணம் என்றும் நினைத்துக் கொண்டிருந்தார். உள்ளூர் லோக்கல் சேனல் வெளியிட்ட செய்தியின்படி, கால்கள் தொடர்ச்சியாக வீக்கமாக இருக்கிறது என்று மருத்துவரை சந்தித்திருக்கிறார். அங்கே அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் கூறியுள்ளார்.

    சோதனை தவறாக இருக்கக்கூடாது என்ற சந்தேகத்தை தீர்ப்பதற்கு இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. நிச்சயமாக பேய்ட்டன் கர்ப்பமாகத்தான் இருக்கிறார் என்பதை மருத்துவர் உறுதி செய்திருக்கிறார். கால்களில் வீக்கம் என்று மருத்துவரை சந்தித்த பேய்ட்டனுக்கு அதுவே ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் என்றாலுமே, அதற்கு அடுத்ததாக மற்றொரு அதிர்ச்சிகரமான செய்தியையும் மருத்துவர் கூறியிருக்கிறார்.

    Read More: ஆமையை சப்பிட்டு அதன் ஓட்டை தலையில் மாட்டிக்கொண்ட உடும்பு - ஷாக்கிங் வீடியோ

    மருத்துவ பரிசோதனைக்கு சென்ற இடத்திலேயே பேய்ட்டனுக்கு சில நிமிடங்களில் குழந்தை பிறக்க இருக்கிறது என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். கர்ப்பமாக இருக்கும் பொழுது குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைத்து பரிசோதனைகளையும் செய்து கர்ப்பிணி பெண் ஆரோக்கியமாக இருக்கிறாரா என்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக ரத்த அழுத்தம், குளுக்கோஸ் அளவு ஆகியவை தொடர்ச்சியாக சரிபார்க்கப்பட வேண்டும்.

    அந்த ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்றார்போல மருத்துவர்கள் மருந்துகளை பரிசோதிப்பார்கள். இதனால் கர்ப்பிணி பெண்ணின் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும். ஆனால் பேய்ட்டனுக்கு தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் இருந்த காரணத்தால் அவருடைய கல்லீரல் மற்றும் கிட்னி சரியாக வேலை செய்யவில்லை. மட்டுமல்லாமல் அவருக்கு உயர் ரத்த அழுத்தமும் இருந்தது என்று மருத்துவர் தெரிவித்திருக்கிறார்.

    பேய்ட்டனின் உடல்நிலை மோசமாக இருப்பதால் குழந்தையை உடனடியாக டெலிவரி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பேட்ய்டன் மட்டும் அவரது பார்ட்னரிடம் தெரிவித்தார். உடனடியாக அவசர கால சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுத்தனர்.

    பேய்ட்டனுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையை 10 வாரத்துக்கு முன்பே பிறந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தையின் எடை 1 கிலோ 800 கிராம் இருந்தது. அம்மாவும் மகனும் ஒரே நாளில் பிறந்திருக்கிறார்கள்! பேய்ட்டனின் பிறந்தநாள் அன்று தான் அவருடைய குழந்தையும் பிறந்திருக்கிறது. கர்ப்பமாக இருந்ததே தெரியாமல் இருந்த பெண்ணுக்கு, அவரின் பிறந்த நாளன்றே பரிசாக மகன் கிடைத்துள்ளது.

    Published by:Srilekha A
    First published:

    Tags: Viral News