முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / எரிமலையின் உச்சியில் செல்ஃபி எடுத்த சுற்றுலா பயணிக்கு நேர்ந்த விபரீதம்

எரிமலையின் உச்சியில் செல்ஃபி எடுத்த சுற்றுலா பயணிக்கு நேர்ந்த விபரீதம்

Mount Vesuvius Crater

Mount Vesuvius Crater

Selfie Accident | செல்பி அவசியம் தான், நாம் அன்றாட வாழ்வில் நடந்த அழகான   தருணங்களைப் நினைவில் வைத்திருப்பதற்காக நாம் செல்பி எடுப்பதில் தவறில்லை, ஆனால் ஆபத்தான இடங்களில் செல்பி என்பது கொஞ்சம் ஓவர் தானே…

  • Last Updated :

செல்போன்கள் தற்போது பெருகி வரும் நிலையில் அதில் செல்பி எடுப்பது என்பது பலரும் ஆபத்தில் சிக்கி கொள்ள காரணமாகிறது. செல்பி அவசியம் தான், நாம் அன்றாட வாழ்வில் நடந்த அழகான தருணங்களைப் நினைவில் வைத்திருப்பதற்காக நாம் செல்பி எடுப்பதில் தவறில்லை, ஆனால் ஆபத்தான இடங்களில் செல்பி என்பது கொஞ்சம் ஓவர் தானே…

அப்படியான ஒரு நிகழ்வுதான் தற்போது கனடாவில் நடந்துள்ளது. அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர் வெசுவியஸ் பள்ளத்தாக்கில் செல்பி எடுக்க முயன்று தடுமாறி விழுந்தார். . இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 23 வயதான இந்த நபர் , தனது குடும்ப உறுப்பினர்கள் மூவருடன், தெற்கு இத்தாலிய நகரமான நேபிள்ஸில் இருக்கும் உயரமான எரிமலையின் உச்சிக்கு சென்றுள்ளனர். இந்த எரிமலையின் உயரம் சுமார் 1,281 மீட்டர் இருக்கும் என கூறுகின்றனர்.

சுற்றுலாப் பயணி எரிமலையின் உச்சியில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த போது அவரது செல்போன் கையிலிருந்து நழுவி எரிமலையின் வாயில் விழுந்ததாகவும், அவர் செல்போனை எடுக்க எண்ணி முயற்சி செய்ததால் அவர் தனது சமநிலையை இழந்து பள்ளத்தில் விழுந்ததாகவும் NBC தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பல மீட்டர்கள் தூரம் பள்ளத்தில் இறங்கியதால் அவரின் கைகளிலும் முதுகிலும் அதிகமான காயங்களும் உடலின் மற்ற இடங்களில் சிறு சிறு காயங்களும் ஏற்பட்டது.

வழிகாட்டிகளுக்கான தளமான Presidio Permanente Vesuvio இன் தலைவரான Paolo Cappelli, சுற்றுலாப் பயணிகள் தடை செய்யப்பட்டப்பாதை வழியாக சென்றதாகக் கூறினார். மேலும் கப்பெல்லி, அந்த குடும்பம் ஒட்டாவியானோ நகரத்திலிருந்து வெசுவியஸின் உச்சியை அடைந்ததாகவும், அவர்கள் தடைசெய்யப்பட்ட பாதை வழியாகவே எரிமலையின் உச்சியை அடைந்ததாகவும் கூறினார். சுற்றுலாப் பயணிகள் அனுமதி கிடையாது என எழுதப்பட்ட பலகைகளை பொருட்படுத்தாமல் மற்றொரு பாதையில் சென்றதாக அவர் கூறினார்.

Also Read : மெட்ரோ ரயிலுக்குள் ‘ரீல்ஸ்’ ஷீட்.. சிக்கலில் சிக்கிய இளம்பெண்..

அதிர்ஷ்டவசமாக, வெசுவியஸின் சுற்றுலா வழிகாட்டிகள் முதலில் அந்த நபரை காப்பாற்றும் முயர்ச்சியில் ஈடுபட்டனர். முதல் கட்ட முயர்ச்சியாக அவர்கள் பள்ளத்தில் விழுந்தவரை வெளியே இழுக்க அந்த பள்ளத்தில் இறங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிசார் மீட்பு பணிக்காக ஹெலிகாப்டரை கொண்டு சுற்றுலா பயணியை காப்பற்றினர். இதையடுத்து கப்பெல் கூறியதாவது, அந்த நபர் மிகவும் அதிர்ஷ்டசாலி ஏனெனில் அவர் தொடர்ந்து சென்றிருந்தால் 300 மீட்டர் பள்ளத்தில் மூழ்கியிருப்பார் என்று கூறினார்.

சுற்றுலா பயணியும் அவரது மூன்று உறவினர்களும் தற்போது பொது நிலத்தை ஆக்கிரமித்த குற்றத்திற்காகவும்,இவர்கள் எந்த டிக்கெட்டும் இல்லாமல் எரிமலைக்குச் சென்றதற்காகவும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிய வந்துள்ளது.

Also Read : ஐரோப்பாவில் வெப்பம்.. ஆண்கள் நைட்டி அணிய யோசனை!

எனவே இந்த இடம் மிகவும் ஆபத்தானது என்பதால் யாரும் இதுபோல் சென்று பிரச்சனையில் சிக்கிக்கொள்ள வேண்டாம்

top videos

    வெசுவியஸ் மிகவும் பிரபலமான செயலில் உள்ள எரிமலைகளில் ஒன்று.. கி.பி 79 இல் ரோமானிய நகரமான பாம்பீயை அழித்து சாம்பலால் போர்த்தியதற்கு இந்த எரிமலை ஒரு சாட்சி.செல்பி எடுப்பது தவறில்லை. ஆனால் எங்கு எடுக்கிறோம் என அறிவது அவசியம்…

    First published:

    Tags: Selfie, Trending