இன்று நம்மில் பலர் ஃபிளிப்கார்ட், அமேசான், மீஷோ போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாக ஏராளமான பொருட்களை வாங்கி வருகிறோம். என்னதான், பொருட்களை பார்த்து, பார்த்து வாங்கியிருந்தாலும், வாழ்க்கையில் ஒரு முறையாவது பொருள்களின் தரம் அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையில் நமக்கு ஏமாற்றம் கிடைத்திருக்கும்.
குறிப்பாக, பெரும் ஆஃபர் மூலமாக வாங்கப்படும் பொருள்கள் பல, நிச்சயமாக நம்மை ஏமாற்றி விடும். ஆன்லைனில் வாங்கப்படும் ஸ்மார்ட் போன், எல்இடி டிவி, பிரிட்ஜ், ஏசி போன்ற பொருட்களை பிராண்ட் மற்றும் ரேட்டிங் பார்த்து நாம் வாங்கும் போது பெரிய அளவுக்கு குறைபாடு எதுவும் வந்து விடாது.
ஆனால், டிரஸ் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் போன்றவற்றை வாங்கும்போது நிச்சயமாக நமக்கு ஏமாற்றம் காத்திருக்கும். இப்படி ஒரு நிகழ்வு அண்மையில் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. அங்கு பிரபல டிக் டாக் பதிவராக உள்ள மரியம், ஆன்லைன் மூலமாக சமீபத்தில் ஏமாந்த கதையை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
ஆன்லைன் நிறுவனமொன்றில் பார்ப்பதற்கு மிக கவர்ச்சிகரமாக இருந்த வெல்வெட் சேர் ஒன்றை அவர் வாங்குவதற்கு முடிவு செய்தார். அதனை ஆர்டர் செய்தபோது அதற்கு டெலிவரி சார்ஜ் இல்லை என்ற ஆஃபர் அவருக்கு கிடைத்தது. ஆஹா, எவ்வளவு பெரிய பொருளை டெலிவரி சார்ஜ் இல்லாமல் கொண்டு வந்து தருகின்றனர் என்ற ஆசையோடு காத்திருந்த மரியம், கடைசியில் ஏமாற்றத்தில் நின்றார்.
அதாவது, வெல்வெட் சேர் என்ற பெயரில், பொம்மை சேர் ஒன்றை அவருக்கு டெலிவரி செய்துள்ளனர். ஆனால், இந்த பொருளை ரிட்டன் செய்வதற்கான வாய்ப்பும் அவருக்கு வழங்கப்படவில்லை. ஆன்லைன் நிறுவனத்தில் போஸ்ட் செய்யப்பட்டிருந்த போட்டோவில் பார்ப்பதற்கு உண்மையான சேர் போலவே இருந்த அந்த பொருள், கடைசியில் டெலிவரி செய்யப்பட்டபோது தான் பொம்மை என தெரிய வந்திருக்கிறது.
Also Read : பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் வீடியோ
இதுபோன்ற காரணங்களால் தான் ஆன்லைனில் பொருட்களை வாங்க தாம் பெரிதும் விரும்புவதில்லை என்றும், ரிட்டன் வசதி இல்லாத பொருட்களை வாங்க வேண்டாம் என்றும் மரியம் கேட்டுக் கொண்டுள்ளார். மரியம் வெளியிட்ட வீடியோவுக்கு 1.13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். பலரும் சுவாரசியமான, அட்டகாசமான கமெண்ட்களை செய்து வருகின்றனர்.
Also Read : கணவரை ஏலத்துக்கு விட்ட பெண், ரிட்டன் கிடையாது என கன்டிஷன்...!
பெரிய சேருக்கும், பொம்மை சேருக்கும் ஒரே மாதிரியான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்க வாய்ப்பில்லை என்று நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். நடிகர் விக்ரம், நடிகர் சூர்யா ஆகியோரது நடிப்பில் வெளியான பிதாமகன் படத்தில் ஏலத்தில் விடப்பட்ட பொருளை, விலை கேட்டதை பாராட்டி கடைசியாக சோப்பு டப்பா வழங்கப்படுவதைப் போல, சேர் ஆர்டர் செய்த பெண்ணுக்கு பொம்மை கொடுத்து அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ஆன்லைன் நிறுவனம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Online shopping, Trending