• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • கோவிட் தடுப்பூசி போட்டு கொள்ளும் 5 அதிர்ஷ்டசாலிகளுக்கு காத்திருக்கும் 1 மில்லியன் டாலர் பரிசு!

கோவிட் தடுப்பூசி போட்டு கொள்ளும் 5 அதிர்ஷ்டசாலிகளுக்கு காத்திருக்கும் 1 மில்லியன் டாலர் பரிசு!

மாதிரி படம்

மாதிரி படம்

அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்று ஓஹியோ ஆகும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வரும் நம் நாட்டில் தொற்றால் ஏற்படும் பெரும் பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள ஒரே வழியாக பார்க்கப்படும் தடுப்பூசியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவில் அந்நாட்டின் தடுப்பூசி இயக்கத்தில் மக்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க அந்நாட்டு மாகாணங்களின் நிர்வாகங்கள் கவர்ச்சிகரமான பல திட்டங்களை கொண்டு வருகின்றன. அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்று ஓஹியோ ஆகும்.

இந்நிலையில் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டு கொள்ளும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஓஹியோ மாகாண ஆளுநர் மைக் டிவைன் தடுப்பூசி போட்டு கொள்ளும் மாகாணத்தின் வாக்காளர்களுக்கு.ஒரு மில்லியன் டாலர் மதிப்புள்ள லாட்டரி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். இதன் மொத்த பரிசு தொகை இந்திய மதிப்பில் 7 கோடி ரூபாய்க்கு மேல். இது தொடர்பாக தனது அதிகாரபூர்வ ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மே 26 அன்று கொரோனா தொற்றுக்கு எதிராக குறைந்த பட்சம் முதல் டோஸ் போட்டு கொண்டுள்ள பெரியவர்கள் உட்பட தடுப்பூசி எடுத்து கொண்டுள்ளவர்களில் இருந்து ஒரு வெற்றியாளரை அறிவிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த லக்கி டிரா மே 26 முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் தொடர்ந்து 5 வாரங்களுக்கு நடக்கும். மேலும் ஒவ்வொரு புதன் வெற்றியாளருக்கும் ஒரு மில்லியன் டாலர்கள் (ரூ.7,33,50,550) பரிசாக கிடைக்கும் என்ற பம்ப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் ஓஹியோ சுகாதாரத் துறை இதற்கான நிதியுதவி நிறுவனமாக இருக்கும், மேலும் ஓஹியோ லாட்டரி இந்த டிராவை நடத்தும். பரிசு பணம் தற்போதுள்ள கூட்டாட்சி கொரோனா வைரஸ் நிவாரண நிதிகளிலிருந்து (federal Coronavirus Relief Funds) அளிக்கப்படும்.

டிரா நடக்கும் நாளில் அதில் பங்கேற்பவர் குறைந்தது 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். ஓஹியோவில் வசிப்பவராக இருக்க வேண்டும். மேலும், டிராவில் பங்கேற்கும் முன்பு தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இவையே இதில பங்கேற்க தேவையான தகுதிகள் என கூறி உள்ளார். இருப்பினும் ஓஹியோ ஆளுநரின் ட்வீட்டுக்கு மக்கள் கலவையான பதில்களை பதிவிட்டுள்ளனர். ஒரு யூஸர் இது ஒரு நல்ல திட்டம், ஏனெனில் தடுப்பூசி குறித்து தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும் சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தின் செலவை விட இது மிக குறைவு என பாராட்டியுள்ளார்.ஆனால் மற்றொரு யூஸர் இது முட்டாள்தனம், வரி செலுத்துவோரின் இவ்வளவு டாலர்களை லாட்டரிக்கு செலவழிப்பதற்கு பதிலாக, மக்கள் தங்களை கவனித்துக் கொள்ள ஊக்குவிக்கவும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தடுப்பூசி போடுவதற்கும் தேவையான நடவடிக்கைகளில் இன்னும் தீவிரமாக ஈடுபடலாம் என விமர்சித்துள்ளார்.

Also read... புதிய வகை கொரோனா வைரஸ்களுக்கு எதிராக கோவாக்சின் வீரியமுடன் செயல்படுகிறது - பாரத் பயோடெக் பெருமிதம்!

35%-க்கும் அதிகமான மக்கள் அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டுள்ளார். ஓஹியோவில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது, அங்கு 36 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இரண்டு டோஸ்களையுமே பெற்றுள்ளனர். இருப்பினும், இந்தியாவில், இந்த சதவீதம் 3-க்கும் குறைவாக உள்ளது, இது உலகளாவிய சராசரியான 4.2 சதவீதத்தை விட குறைவாகும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: