நேரலையில் பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமைச்சருக்கு வலுக்கும் எதிர்ப்பு - வைரல் வீடியோ

பெண் செய்தியாளரை தட்டியவர் 43 வயதான டாமி கால்வே. இவர் ஜார்ஜியாவின் இளைஞர் நலத்துறை அமைச்சர் என்பது தெரியவந்துள்ளது.

நேரலையில் பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டிய அமைச்சருக்கு வலுக்கும் எதிர்ப்பு - வைரல் வீடியோ
  • News18 Tamil
  • Last Updated: December 14, 2019, 11:51 AM IST
  • Share this:
மாரத்தான் ஓட்டம் குறித்த செய்தியை நேரலையில் பெண் செய்தியாளர் தொகுத்து வழங்கி கொண்டிருந்த போது, போட்டியாளர் ஒருவர் அவரது பின்புறத்தை தட்டி சென்ற வீடியோ வைரலாகி உள்ளது.

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் மராத்தான் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்வை அலெக்ஸ் போஜார்ஜியன் என்ற பெண் செய்தியாளர் நேரலையில் தொகுத்து வழங்கி கொண்டிருந்தார். அப்போது போட்டியாளர்கள் சிலர் கேமிராவின் முன் வந்தும், கைகளை நீட்டியும் சேட்டை செய்தனர்.

Also Read : Miss Universe 2019 : போட்டியிட்ட அழகிகளின் ''பிகினி ரேம்ப் வாக்''
அலெக்ஸ் போஜார்ஜியன் தொடர்ந்து நேரலையை தொகுத்து வழங்கி கொண்டிருந்தார். அப்போது போட்டியாளர் ஒருவர் திடீரென அவரது பின்புறத்தை தட்டி சென்றார். இதனால் ஷாக்கான பெண் தொகுப்பாளர் திகைப்பில் ஆழ்ந்தார். வீடியோவில் பதிவான அந்த போட்டியாளர் பின் சமூக ஊடகம் மூலமாக கண்டறியப்பட்டார்.பெண் செய்தியாளரை தட்டியவர் 43 வயதான டாமி கால்வே. இவர் ஜார்ஜியாவின் இளைஞர் நலத்துறை அமைச்சர் என்பது தெரியவந்துள்ளது. இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து அவருக்கு சிக்கல் ஏற்பட்டது. பெண் செய்தியாளரின் பின்புறத்தை தட்டியதற்காக பலர் அவருக்கு தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

To the man who smacked my butt on live TV this morning: You violated, objectified, and embarrassed me. No woman should EVER have to put up with this at work or anywhere!! Do better. https://t.co/PRLXkBY5hnஇது தொடர்பாக டாமி கால்வே கூறுகையில், “நான் அவரை முதுகில் தான் தொட்டேன். ஆனால் தவறுதலாக எங்கே பட்டது என்று தெரியவில்லை. எந்த தவறான நோக்கத்துடனும் நான் செயல்படவில்லை. தவறாக இருந்தால் அந்த பெண் செய்தியாளர் எனது மன்னிப்பை ஏற்க வேண்டும்“ என்றுள்ளார்.

Also Read : லாட்டரியில் விழுந்த 6 கோடி ரூபாய்... அந்தப் பணத்தில் வாங்கிய நிலத்தில் புதையல்...!

First published: December 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading