Home /News /trend /

தக்காளி லோடுக்குள் மறைத்து கடத்தப்பட்ட 100 கிலோ Cocaine - கண்டுபிடிச்சது யாருனு பாருங்க...

தக்காளி லோடுக்குள் மறைத்து கடத்தப்பட்ட 100 கிலோ Cocaine - கண்டுபிடிச்சது யாருனு பாருங்க...

US Dog

US Dog

Trending | K9 என அழைக்கப்படும் நுகெட்ஸ் என்ற மோப்ப நாயைக் கொண்டு வண்டியை சல்லடை போட்டு சோதித்துள்ளனர். அப்போது அந்த வண்டியில் போதைப்பொருள் இருப்பதை தனது சக்தியால் உணர்ந்த K9 அதிகாரிகளை அலர்ட் செய்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் காவல்துறையைச் சேர்ந்த மோப்ப நாய் ஒன்று, தக்காளி லாரியில் மறைத்து வைத்து கடந்த முயன்ற சுமார் 100 கிலோ எடையுள்ள கொக்கைன் (Cocaine) போதைப் பொருளை கண்டுபிடித்து பாராட்டுக்களை குவித்து வருகிறது. அதன் மதிப்பு சுமார் 10.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

கடந்த 25ம் தேதி அன்று அமெரிக்க நேரப்படி அதிகாலை 2.30 மணி அளவில் வேகமாகவும், ஒழுங்கற்ற முறையிலும் ஓட்டிச் சென்ற டிரக் ஒன்றினை லாஸ் வேகாஸ் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது போலீசார் டிரக் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவரோ முன்னுக்குப் பின்ன முரணாக பதிலளித்ததோடு, மிகவும் பதற்றமாகவும் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் வண்டியை சோதனையிட முடிவெடுத்தனர்.

K9 என அழைக்கப்படும் நுகெட்ஸ் என்ற மோப்ப நாயைக் கொண்டு வண்டியை சல்லடை போட்டு சோதித்துள்ளனர். அப்போது அந்த வண்டியில் போதைப்பொருள் இருப்பதை தனது சக்தியால் உணர்ந்த K9 அதிகாரிகளை அலர்ட் செய்துள்ளது. உடனடியாக பெட்டிகளில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த தக்காளிகளை சோதனை செய்த அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

ஆம், அந்த பெட்டிகளுக்குள் கொக்கைன் எனப்படும் விலை உயர்ந்த போதைப்பொருளை கடத்தியது தெரியவந்து. இதனையடுத்து 100 கிலோ எடையுள்ள, சுமார் 10.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள கொக்கைன் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.இதுகுறித்து லாஸ் வேகாஸ் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில், "LVMPD K9 Nuggetz போதை மருத்துக்கான பாசிட்டிவ் அறிகுறிகள் இருப்பதை சுட்டிக்காட்டியது. தக்காளி பெட்டிகளில் 230 பவுண்டுகள் கொக்கைன் கண்டுபிடிக்கப்பட்டது, இதன் மதிப்பு $10.5 மில்லியன் டாலர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக ஓட்டுநர் நானக் சிங் மற்றும் அவருடன் பயணித்த சந்திர பிரகாஷ் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சோசியல் மீடியாவில் இதுபோன்ற புத்திசாலித்தமான நாய்களின் கதை ஏராளம். கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற நாயிக்கும், அதன் முன்னாள் உரிமையாளருக்கும் இடையிலான பாச போராட்டம் சோசியல் மீடியாவில் வைரலானது.

Also Read : மேஜிக் செய்து குரங்கை அசரடித்த இளைஞர் - வீடியோ

எட்டு வயது ஜெர்மன் ஷெப்பர்ட் ‘வாங்வாங்’, மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜிச்சுவான் கவுண்டியில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் மோப்ப நாயாகப் பணிபுரிந்த அனுபவம் உள்ளது.

எட்டு வயதான ஜெர்மன் ஷெப்பர்ட் ஜூன் 2019 இல் ஓய்வு பெற்ற பிறகு ஒரு குடும்பத்தினாரால் தத்தெடுக்கப்பட்டது. இதனையடுத்து அதனுடன் பணியாற்றிய போலீஸ் அதிகாரி வாங் வாங்கை மீண்டும் காண அதன் புது இருப்பிடத்திற்கு சென்றுள்ளார்.தனது பழைய நண்பனைக் கண்டதால் வாங் வாங் மிகுந்த உற்சாகம் அடைந்தது. முன் வாசல் வரை சென்று காவல்துறை நண்பரை வரவேற்ற வாங் வாங், அவர் அதனை அரவணைத்து, தடவிக்கொடுப்பதற்காக தரையில் படுத்துக்கொண்டு பாச மழை பொழிந்தது. போலீஸ் அதிகாரியின் கால்களை உரசியப்படி, சற்றே கண்ணீர் விடுவது போல் வாங் வாங் செய்த பாசப்போராட்டம் அப்போது சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.

Also Read : ஹம்பேக் திமிங்கலத்துடன் நடனமாடிய டால்பின்... வீடியோ! 

இப்போது காவல்துறையினர் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தால் கூட கண்டறிய முடியாத 100 கிலோ எடையுள்ள கொக்கைனைக் கண்டறிந்த மோப்ப நாய் K9 க்கு சோசியல் மீடியாவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Dog, Trending

அடுத்த செய்தி