• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • மூன்று ஆண்டுகளாக பச்சை மாமிசத்தை மட்டுமே உண்ணும் அமெரிக்கா நபர்!

மூன்று ஆண்டுகளாக பச்சை மாமிசத்தை மட்டுமே உண்ணும் அமெரிக்கா நபர்!

மாதிரி படம்

மாதிரி படம்

நீங்கள் அப்படி என்னென்ன உணவுகள் தான் சாப்பிடுவீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மதிய உணவு தான் பிரதான உணவு என்றும், அரைபவுண்டு அளவுக்கு பச்சையான, உப்பில்லாத வெண்ணெய் மற்றும் மூன்று அல்லது நான்கு முட்டைகள் சேர்த்து பச்சையான இறைச்சியை சாப்பிடுவேன் என்று தெரிவித்தார்.

  • Share this:
அமெரிக்காவின் நெப்ராஸ்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த மூன்று ஆண்டுகளாக பச்சையாக இறைச்சி சாப்பிட்டு வருவதாக செய்தி வெளியானது. பச்சை மாமிசம் மட்டுமே சாப்பிட்டு எப்படி ஒருவரால் உயிருடன், ஆரோக்கியமாக, எந்த உடல் நலக்கோளாறும் இன்றி இருக்க முடியும்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

39 வயதான வெஸ்டன் ரோவ் என்பவர் அமெரிக்காவை சேர்ந்தவர். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக, பச்சை மாமிசம், அதாவது சமைக்கப்படாத இறைச்சியை மட்டுமே உண்டு வருவதாக சமீபத்தில் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, பச்சை மாமிசம் உண்டு வந்ததால் ஆற்றல் மேம்பட்டதாகவும், இதுவரை இந்த உணவுப்பழக்கத்தால் எந்த விதமான பிரச்சனையையும் எதிர்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

டெய்லி மெயிலில் பச்சை மாமிசம் மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் ஒரு மனிதன் என்று வெஸ்டனை மேற்கோள் காட்டி ஒரு அறிக்கை வெளியானது: அதில் “இந்த நேரத்தில் நான் 99 சதவிகித ஆர்கானிக், புதிய, சமைக்காத பச்சையான இறைச்சியை சாப்பிடுகிறேன் ஒரே ஒரு முறை கூட எனக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதில்லை. நான் இனி பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடப் போவதில்லை. அதனால், நான் சமைத்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது வருத்தமாக இருப்பது என்றும் கூற மாட்டேன். நான் சாப்பிடும் அனைத்து இறைச்சிகளும், பால் பொருட்களும் கால்நடைகளை வளர்க்கும் உள்ளூர் சப்ளையர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து மட்டுமே பெறுகிறேன். என் தோட்டத்தில் நானே மரம் செடிகளை நட்டு எனக்கான பழங்களை வளர்க்கிறேன்" என அவர் கூறிய தகவல் வெளியாகியுள்ளது.

அதைப்பற்றி வெஸ்டன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ இங்கே.
இப்படி ஒரு வித்தியாசமான உணவுப்பழக்கம் எப்படி தொடங்கியது என்று அவரிடம் கேட்டபோது, ​​"நான் 20 வயதில் என்னுடைய ஊட்டச்சத்து மற்றும் ஃபிட்னஸ் பற்றி அக்கறைக் கொள்ள ஆரம்பித்தேன். எனக்கு அரிப்பு, தோலழற்சி, மங்கும் சிந்தனை மற்றும் தீவிரமான உடல் சோர்வு உள்ளிட்ட பல்வேறு வித்தியாசமான அறிகுறிகளை அனுபவிக்க ஆரம்பித்தபோது என் உணவில் மாற்றம் தேவை என்பதை உணர்ந்தேன். 35 வயதாக இருந்தபோதுதான் நான் மாமிச உணவை சாப்பிட முயற்சித்தேன். நான் தொடங்கிய நேரத்தில், இது மிகப்பெரிய டிரெண்டாக இருந்தது.

நீங்கள் அப்படி என்னென்ன உணவுகள் தான் சாப்பிடுவீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மதிய உணவு தான் பிரதான உணவு என்றும், அரைபவுண்டு அளவுக்கு பச்சையான, உப்பில்லாத வெண்ணெய் மற்றும் மூன்று அல்லது நான்கு முட்டைகள் சேர்த்து பச்சையான இறைச்சியை சாப்பிடுவேன் என்று தெரிவித்தார். காலை உணவில் பழம் சாப்பிடுவார் என்பதும், இரவு உணவுக்கு மாமிசத்துடன் சமைத்த உருளைக்கிழங்கை சேர்த்து சாப்பிடுவதாகவும் கூறினார்.

Also read... ’ஏர் இந்தியா விமான கலரில் உணவகம்’ - இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பகிர்ந்த ரத்தன் டாட்டா!

பச்சை மாமிசம் சால்மோனெல்லா தோற்று நோய் ஆபத்தை ஏற்படுத்தும், அது வெஸ்டனைத் தொந்தரவு செய்யவில்லையா? என்ற கேள்விக்கு, "நான் நூற்றுக்கணக்கான பவுண்டுகள் பச்சையான, கோழியை சாப்பிட்டேன், ஆனால் எந்த பாதிப்பும் ஒரே ஒரு முறை கூட ஏற்படவில்லை. பச்சை இறைச்சியில் பாக்டீரியாவின் இயற்கையான பேலன்ஸ் உள்ளது என்று உறுதியாக நம்புகிறேன்" என்று அவர் நியூயார்க் போஸ்ட்டிடம் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: