• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 2 லிட்டர் சோடாவை வெறும் 19 வினாடிகளுக்குள் குடித்து கின்னஸ் உலக சாதனை படைத்த அமெரிக்கர்..

2 லிட்டர் சோடாவை வெறும் 19 வினாடிகளுக்குள் குடித்து கின்னஸ் உலக சாதனை படைத்த அமெரிக்கர்..

புக்கர்

புக்கர்

எரிக் ‘பேட்லேண்ட்ஸ்’ புக்கர் என்ற அந்த நபர் பானங்களை அதிவிரைவாக குடித்து முடிக்கும் தனது திறன்களை வீடியோ எடுத்து தனது பிரபல யூடியூப் பக்கத்தில் அப்லோட் செய்தார்.

  • Share this:
அமெரிக்காவை சேர்ந்த சாப்பாட்டு போட்டியாளரான ஒருவர் மிக குறைவான நேரத்தில் இரண்டு லிட்டர் சோடாவை குடித்து நம்பமுடியாத புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். எரிக் “பேட்லேண்ட்ஸ்” புக்கர் (Eric “Badlands” Booker) என்றழைக்கப்படும் அமெரிக்க நபர் தான் இந்த சாதனையை புரிந்துள்ளார். குளிர்பானங்கள் மீது தான் வைத்துள்ள ஈர்ப்பை ‘கின்னஸ் உலக சாதனை’ என்ற உச்ச நிலைக்கு கொண்டு சென்றுள்ள நியூயார்க்கை சேர்ந்த எரிக் புக்கர் என்ற இந்த மனிதர், வெறும் 18 வினாடிகளில் 2 லிட்டர் பாட்டில் சோடாவை குடித்து சாதனை படைத்துள்ளார். எரிக் ‘பேட்லேண்ட்ஸ்’ புக்கர் என்ற அந்த நபர் பானங்களை அதிவிரைவாக குடித்து முடிக்கும் தனது திறன்களை வீடியோ எடுத்து தனது பிரபல யூடியூப் பக்கத்தில் அப்லோட் செய்தார். பின்னர் கின்னஸ் உலக சாதனையின் (Guinness World Record) அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்டது.

BadlandsChugs என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் எரிக், ரேப் பாடகராகவும் இருக்கிறார். தனது யூடியூப் சேனலில் படை பாடி அதை வீடியோ எடுத்து போடுவது, செல்லும் இடங்கள் பற்றி Vlog போடுவது மற்றும் தனது அதீத சாப்பாட்டு திறன் பற்றி ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக அவ்வப்போது வீடியோ போடுவது என பன்முக திறமை கொண்டவராக இருந்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனிடையே Guinness World Record-ன் யூடியூபில் ஷேர் செய்யப்பட்ட வீடியோவில், பாட்டிலில் அடைக்கப்பட்ட சோடாவை ஜாரில் ஊற்றி அளவிடும் முன்னர் எரிக் பேட்லேண்ட்ஸ் புக்கர் தனது சாதனையைப் பற்றி பேசுகிறார். சோடாவின் சரியான அளவை அவர் அளந்து நமக்கு காட்டிய பிறகு, அவர் அதை தூக்கி ஒரே கல்ப்பாக சில நொடிகளில் முழுவதையும் உறிஞ்சி குடித்து விடுகிறார். வீடியோவில் காட்டப்படும் ஸ்டாப் வாட்ச் அவர் வெறும் 18.45 வினாடிகளில் முழு ஜாடி சோடாவையும் குடித்ததாக காட்டுகிறது. ஆன்லைனில் ஷேர் செய்யப்பட்டதிலிருந்து இந்த வீடியோ 1.5 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களுடன், 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை யூடியூபில் பெற்றுள்ளது.

Also read... தண்ணீர் தொட்டியில் சிக்கி கொண்ட புதிதாக பிறந்த யானை குட்டி - வைரலாகும் மீட்பு வீடியோ!

இந்த சாதனை வீடியோவை கண்ட ரசிகர்கள் மற்றும் அவரது சப்ஸ்கிரைபர்கள் எரிக்கின் உலக சாதனைக்கு வாழ்த்துகளை கமெண்ட்ஸ் மூலம் தெரிவித்தனர். இந்த வீடியோவுக்கு பதிலளித்த மக்கள், மற்றும் எரிக் செய்வது போல் யாரோ கோலா ஊற்றுவதை ரசிப்பதை தாம் பார்க்கவில்லை என்று கூறினர். சில பயனர்கள் எரிக் முழு கடலையும் குடிக்கும் திறன் கொண்டவர்கள் என்று கேலி செய்தனர். எரிக் ரசித்து குடிப்பது போல இதுவரை யாரும் கோலாவை ஊற்றி ரசித்து குடிப்பதை தங்கள் பார்த்ததில்லை என்றும் கூறினர். மேலும் சிலர் எரிக் பேட்லேண்ட்ஸ் புக்கர் ஒரு முழு கடலையும் குடிக்கும் திறன் கொண்டவர் என்று வேடிக்கையாக கமெண்ட் செய்தனர்.

அடிக்கடி தனது யூடியூப் சேனலான BadlandsChugs-ல் துரித உணவு சாப்பிடும் திறன் மற்றும் பானங்களை வேகமாக குடித்து முடிக்கும் திறன்களின் வீடியோக்களை பகிர்ந்து கொண்டாலும், அவருக்கு rap இசை மீதும் ஆர்வம் உண்டென்பதால், இதுவரை 9 rap வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இதனிடையே அசாதாரண சாப்பிடும் திறனை ஒருவர் சாதனையாக்குவது இது முதல் முறை அல்ல. வித்தியாசமான சாதனை படைத்தவர்களின் பட்டியல் மிக நீளம். உதாரணமாக ஸ்டீவன் ரூபெல் என்ற அமெரிக்க மனிதர் 1 லிட்டர் கிரேவியை வெறும் 38.22 வினாடிகளில் குடித்து இதே போன்றதொரு சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: