ஹூலா ஹூப்பிங்கில் புதிய கின்னஸ் உலக சாதனை படைத்த அமெரிக்கர் -வைரலாகும் வீடியோ

புதிய கின்னஸ் உலக சாதனை படைத்த அமெரிக்கர்

அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர் ஹூலா ஹூப்பிங் (hula hooping) எனப்படும் கனமான வளையத்தை உடலில் வைத்து சுழற்றுவதில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

  • Share this:
கடினமான அசாதாரணமான உலக சாதனைகளை நெட்டிசன்களை திகைக்க வைக்கும் அளவிற்கு சிலர் சாதாரணமாக செய்து விடுகிறார்கள். கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் (Guinness World Records) அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் சாதனை படைப்பவர்களின் படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது ஷேர் செய்யப்படுகிறது. சாதனை படைப்பவர்களின் அசாதாரண திறமைகளை பற்றி கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் தொடர்ந்து போஸ்ட் செய்து வருகிறது. அந்த வகையில் ஒரு சுவாரஸ்யமான சாதனை போஸ்ட் ஒன்றை கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் ஹூலா ஹூப்பிங் (hula hooping) எனப்படும் கனமான வளையத்தை உடலில் வைத்து சுழற்றுவதில் படைத்துள்ள சாதனை அடங்கிய வீடியோ தான் அது. இது தொடர்பான வீடியோ கிளிப் கடந்த 3 நாட்களுக்கு முன் கின்னஸ் உலக சாதனையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவேற்றப்பட்டது.

அந்த வீடியோவில் ஹூலா ஹூப்பிங் சாதனையை நிகழ்த்தியவர் அமெரிக்காவை சேர்ந்த ஓபரோஇன் ஓடிடிக்பெஃப் என்ற அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர் ஆவார். அவர் இந்த ஹூலா ஹூப்பிங் சாதனையை நின்று கொண்டே நிகழ்த்தவில்லை. இரு டேபிள்களுக்கு நடுவே புஷ் அப் எடுப்பது போன்று படுத்து கொண்டு வயிறு மற்றும் இடுப்பிற்கு நடுவே அடிவயிற்றில் கனமான வளையத்தை வைத்து சுழற்றி சுழற்றி செய்துள்ளார். அவரது இந்த பொசிஷன் abdominal plank position அதாவது அடிவயிற்று பிளாங் நிலை என்று குறிப்பிடப்படுகிறது.

 மிகவும் கடினமான இந்த நிலையில் கிட்டத்தட்ட 3 நிமிடங்கள் 16 வினாடிகள் இப்படி ஹூலா ஹூப்பிங் செய்துள்ளார். வீடியோ கிளிப்பின் முடிவில் abdominal plank position-ல் இருந்து கொண்டே நீண்டநேரம் ஹூலா ஹூப்பிங் என்ற உலக சாதனையை படைத்த பின் அவர் மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் சிரிப்பதை பார்க்க முடிகிறது. இந்த சுவாரசிய சாதனை வீடியோ கின்னஸ் உலக சாதனைகளின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "வயிற்று பிளாங் நிலையில் மிக நீண்ட நேர ஹூலா ஹூப்பிங் 3 நிமிடம் 16 வினாடி by @mr.obaroene" என்ற கேப்ஷனுடன் ஷேர் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹூலா ஹூப்பிங்கில் சாதனை மனிதர் ஓபரோ செய்துள்ள வேறு சில ரெக்கார்ட் குறித்த கூடுதல் விவரங்களும் பகிரப்பட்டுள்ளன.

ஹூலா ஹூப்பிங் செய்து கொண்டே 734 படிக்கட்டுகள் ஏறிய சாதனை மற்றும் வளையங்களில் மிக நீண்ட தூரம் ஆடிய சாதனை(152.52 மீட்டர்) உள்ளிட்டவற்றையும் இந்த மனிதர் செய்துள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இன்ஸ்டாவில் இந்த வீடியோ ஏராளமான லைக்குகள் மற்றும் வியூஸ்களை தொடர்ந்து பெற்று வருகிறது.

 
Published by:Tamilmalar Natarajan
First published: