முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / மருத்துவர் சொன்ன ஒரு வார்த்தை...165 கிலோ உடல் எடையை குறைத்த நபர்.. சாத்தியமானது எப்படி?

மருத்துவர் சொன்ன ஒரு வார்த்தை...165 கிலோ உடல் எடையை குறைத்த நபர்.. சாத்தியமானது எப்படி?

நிக்கோலஸ் கிராஃப்ட்

நிக்கோலஸ் கிராஃப்ட்

உணவுப் பழக்கத்தை மாற்ற எந்த வித பிரத்யேக எடை இழப்பு உணவையும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

அமெரிக்காவின் மிசிசிப்பியில் உள்ள ஒரு நபர், அவரது அதீத எடை காரணமாக அவர் நீண்ட காலம் வாழ மாட்டார். அவர் ஒரு "டிக்கிங் டைம் பாம்" என்று அவரது மருத்துவர் கூறிய பிறகு, நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற முனைப்போடு நான்கு ஆண்டுகளில் 365 பவுண்டுகள் (தோராயமாக 165 கிலோ) எடையைக் குறைத்துள்ளார்.

நிக்கோலஸ் கிராஃப்ட் என்ற மனிதர் தான் இதை சாத்தியமாகியது. இவர் சிறுவயதில் இருந்தே அதீத எடையோடு காணப்பட்டுள்ளார். உயர்நிலைப் பள்ளியில் அவர் படிக்கும்போதே கிட்டத்தட்ட 300 பவுண்டுகள் அதாவது 136 கிலோ எடை வரை இருந்துள்ளார். "மனச்சோர்வு என்னை அதிகமாக சாப்பிடுவதற்கு இட்டுச் சென்றது. இதனால் என் உடல் எடை என்பதை குறைக்கவே முடியவில்லை.’ என்று கிராஃப்ட் கூறினார்.

அவரது உடல் எடை காரணமாக, உடல் வலி, முழங்கால் வலி மற்றும் மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவரால் "வழக்கமான வாகனங்களில் செல்ல" முடியவில்லை. இதனால் கிராஃப்ட் தனது குடும்ப நிகழ்வுகளுக்கு செல்வதையும், பயணம் செய்வதையும் கூட நிறுத்திவிட்டதாக பகிர்ந்துள்ளார்.

2019-ம் ஆண்டில், ஒரு மருத்துவர் கிராஃப்டிடம் அவர் ஒரு "டிக்டிங் டைம் பாம்" போன்ற நிலையில் இருப்பதாகவும் அவரது உடல் எடையே அவரை கொல்லப் போகிறது. உடல் எடையை குறைக்க எந்த முயற்சியையும் செய்யவில்லை என்றால் அதிகபட்சம் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் அவர் இறந்துவிடுவார் என்று கூறியுள்ளார்.

இந்த வார்த்தைகள் கிராஃப்டை பெரிதும் பாதித்துள்ளது. அவருக்கு நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற ஆசை பிறந்துள்ளது. தனது எடை இழப்பு பயணத்தை 2019 இல் தொடங்கினார். உணவுக் கட்டுப்பாடு மூலம் முதல் மாதத்தில் சுமார் 18 கிலோவைக் குறைத்துள்ளார். எடையை குறைப்பதற்கு அவர் முக்கிய ஆயுதமே உணவு பழக்கம் தான்.

துரித உணவுகளை சாப்பிடுவதை முதலில் நிறுத்தியுள்ளார். அதே நேரம் உணவுப் பழக்கத்தை மாற்ற எந்த வித பிரத்யேக எடை இழப்பு உணவையும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலாக சாதாரணமாக சாப்பிடும் அளவில் கலோரி உட்கொள்ளலில் கவனம் செலுத்தியுள்ளார். ஒரு நாளைக்கு 1,200 முதல் 1,500 கலோரி வரை மட்டும் சாப்பிட வேண்டும் என்று உறுதியாக இருந்துள்ளார்.

இதையும் படிங்க;  தன்னையே திருமணம் செய்துகொண்ட பெண்... ஒரே நாளில் விவகாரத்து

இந்த முயற்சியால் 4 வருடத்தில் 165 கிலோ வரை குறைத்துள்ளார். இந்த எடை குறைப்பு முயற்சிக்கு அவரது பாட்டி தான் பெரிய உறுதுணையாக இருந்துள்ளார். தனது பேரனை அடிக்கடி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அதற்கு கிராஃப்ட் எடையை குறைத்துவிட்டு அவரை அடிக்கடி பார்க்க வருவதாக உறுதியளித்துள்ளார். அதன் ஒரு பெரிய குறிக்கோளாக வைத்துக்கொண்டே எடையை குறைத்துள்ளார். ஆனால் இவர் முழுவதும் எடையை குறைக்கும் முன்னர் அவர் இறந்து விட்டார்.

ஆனாலும் தனது பாட்டிக்கு உறுதியளித்தது போல் எடையை குறைத்ததை நினைத்து பெருமிதம் கொள்கிறார். எடை குறைத்த பின்னர் சுவாசிப்பதில் எந்த சிக்கலும் இல்லை மற்றும் பயணம் மேற்கொள்வதும் இனிதாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். டாக்டர் சொன்ன வார்த்தை நான்கு வருடத்தில் அவரது வாழ்க்கையை பெரிதும் மாற்றியுள்ளது.

First published:

Tags: Trending, Trending News, Weight loss