ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

உலகின் மிக காரமான மிளகாயை சில நொடிகளில் சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்த விநோத மனிதர்!

உலகின் மிக காரமான மிளகாயை சில நொடிகளில் சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்த விநோத மனிதர்!

Guinness Record

Guinness Record

Guinness World Record | உலகிலேயே மிகவும் காரமான கரோலினா ரீப்பர் மிளகாயை 8.72 வினாடிகளில் சாப்பிட்டு உலக சாதனையை படைத்துள்ளார் இவர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கின்னஸ் உலக சாதனைகள் பல இருந்தாலும், அவற்றில் சில நம்மை ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கும். அதே போன்று எதாவது ஒரு சாதனையை செய்து, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று பில்லியன் கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில், மிகவும் வினோதமான ஒரு சாதனையை செய்து எல்லோரையும் அசத்தி உள்ளார் கலிஃபோர்னியாவை சேர்ந்த ஒரு நபர். ஆம், உலகிலேயே மிகவும் காரமான கரோலினா ரீப்பர் மிளகாயை 8.72 வினாடிகளில் சாப்பிட்டு உலக சாதனையை இவர் செய்துள்ளார்.

இதன் மூலம், இவர் இணையத்தை திகைக்க வைத்துள்ளார். கின்னஸ் உலக சாதனையை செய்தாக வேண்டும் என்பதற்காக இவர் சமீபத்தில் மூன்று கரோலினா ரீப்பர் மிளகாயை சாப்பிட்டுள்ளார். இந்த மிளகாய் வகை மிகவும் காரமாக இருக்கும் என்பது அதிர வைக்கும் செய்தி. இவர் மிளகாயை உண்ணும் வீடியோவை பகிர்ந்து, தனது சாதனையையும் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி ஒரு வினோத கின்னஸ் சாதனையை செய்த நபரின் பெயர் கிரிகோரி ஃபோஸ்டர் ஆகும். டவுன்டவுன் சான் டியாகோவில் உள்ள சீபோர்ட் ஷாப்பிங் சென்டரில் குறைந்த நேரத்தில் மூன்று கரோலினா ரீப்பர் மிளகாய்களை சாப்பிட்டு இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையின் மூலம், மைக் ஜாக் என்பவரின் முந்தைய சாதனையான 9.72 வினாடிகளை இவர் முறியடித்துள்ளார்.


இவரின் இந்த சாதனையை குறித்து கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் "மூன்று கரோலினா ரீப்பர் மிளகாய்களை 8.72 வினாடிகள் வேகமான நேரம் அளவில் சாப்பிட்டுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், அமெரிக்காவின் தென் கரோலினாவில் உள்ள வின்த்ரோப் பல்கலைக்கழகம் நடத்திய சோதனைகளின்படி, கரோலினா ரீப்பர் மிளகாய் என்பது மிகவும் காரமான மிளகாய் என்றும், சராசரியாக 1,641,183 சகோவில் ஹீட் அளவுகளை (SHU) கொண்டதாகவும் இது உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

Also Read : வெளிநாட்டில் இருந்து வந்து இந்தியாவில் தற்கொலை செய்துகொள்ளும் பறவைகள்.. காரணம் என்ன.?

இந்த சாதனையை கிரிகோரி இதற்கு முன்பும் முறியடிக்க முயன்றுள்ளார். ஆனால் அப்போது அதைச் செய்ய முடியவில்லை. அவரது வாயில் மிளகாய் விழுங்காமல் இருந்ததால் அவரது முதல் முயற்சியே தகுதி நீக்கம் செய்யப்பட்டது. பின்னர், கனடாவை சேர்ந்த மைக் ஜாக்கின் அப்போதைய சாதனையான 9.72 வினாடிகளை முறியடிப்பதிலும் அவர் தோல்வியடைந்தார். பிறகு கிரிகோரி கின்னஸ் உலக சாதனை புத்தகத்திடம் கூறுகையில், மிளகாய் மீதான சகிப்புத்தன்மைக்கு பதிலாக, அதை மெல்லும் நுட்பத்தில் தேர்ச்சி பெறுவதே தனது முயற்சியாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

Also Read : தினமும் 2 கி.மி நடந்து சென்று உரிமையாளருக்கு உணவு கொண்டு சேர்க்கும் நாய் - வைரல் வீடியோ

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நிமிடத்தில் 120 கிராம் கரோலினா ரீப்பர் மிளகாயை அதிகம் சாப்பிட்டவர் என்கிற சாதனையையும் கிரிகோரி பெற்றுள்ளார். இவரின் விடாமுயற்சி தான் இப்படியொரு கடினமான உலக சாதனையை செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.

First published:

Tags: Guinness, Trending, Viral Video