முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ஒரே நிமிடத்தில் 17 அதிக காரமிக்க மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்த நபர்..!

ஒரே நிமிடத்தில் 17 அதிக காரமிக்க மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்த நபர்..!

Hot Ghost Peppers

Hot Ghost Peppers

Guinness World Record | இவர் சாப்பிட்டு சாதனை படைத்த மிளகாய் வகை Ghost Peppers ஆகும். இந்த வகை மிளகாய் முதன்மையாக வடகிழக்கு இந்தியாவில் வளர்க்கப்படுகிறது மற்றும் கடந்த 2007-ல் கின்னஸ் உலக சாதனை அமைப்பால் உலகின் வெப்பமான மிளகாய் (world’s hottest chilli pepper) என சான்றளிக்கப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த மிளகாய் ஆர்வலர் ஒருவர் மிக கடுமையான காரம் கொண்ட 17 மிளகாய்களை, வெறும் 1 நிமிடத்தில் சாப்பிட்டு உலக சாதனை படைத்து உள்ளார்.

இவர் சாப்பிட்டு சாதனை படைத்த மிளகாய் வகை Ghost Peppers ஆகும். இந்த வகை மிளகாய் முதன்மையாக வடகிழக்கு இந்தியாவில் வளர்க்கப்படுகிறது மற்றும் கடந்த 2007-ல் கின்னஸ் உலக சாதனை அமைப்பால் உலகின் காரமான மிளகாய் (world’s hottest chilli pepper) என சான்றளிக்கப்பட்டது. கலிபோர்னியாவை சேர்ந்த கிரிகோரி ஃபோஸ்டர் (Gregory Foster) என்பவரே, இந்த Ghost Peppers எனப்படும் கடும் ஹாட்டான மிளகாய்களை வேகமாக தின்று (17 மிளகாய்களை) ஒரே நிமிடத்தில் சாப்பிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்து அசத்தி இருக்கிறார்.

இந்த Ghost Pepper எனப்படும் மிளகாயின் மற்றொரு பெயர் Bhut Jolokia என்பதாகும். ஒரு செய்திக்குறிப்பின்படி, கடந்த நவம்பர் 14, 2021-ல் மிளகாய் மனிதரான கிரிகோரி ஃபோஸ்டர் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். எனினும் இவரது இந்த சாதனை அதிகாரப்பூர்வமாக கடந்த ஆகஸ்ட் 8 அன்று தான் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மிளகாய் ஆர்வலர் கிரிகோரி ஃபோஸ்டர் சாதனை மைல்கல்லை அடைய ஒரு நிமிடத்திற்குள் சுமார் 110.50 கிராம்/3.98 அவுன்ஸ் அல்லது 17 காரமான Ghost Peppers-ஐ கடித்து, சுவைத்து சாப்பிட்டு உள்ளார். Pepper Geek-ன் கூற்றுப்படி இந்த காரமான கோஸ்ட் பெப்பர் மிளகாய் ஒரு மில்லியன் Scoville Heat Units-களை (SHUs) கொண்ட உலகின் அதிகாரமான மிளகாய் வகைகளில் ஒன்றாகும்.


அதாவது கிரிகோரி ஃபோஸ்டர் ஒரு நிமிடத்தில் சுமார் 17 மில்லியன் ஸ்கோவில் ஹீட் யூனிட்களை சாப்பிட்டு உள்ளார். செய்தி குறிப்பின்படி கிரிகோரி ஃபோஸ்டர் எப்போதுமே காரமான உணவை விரும்பி சாப்பிடுபவர், வீட்டிலேயே சொந்தமாக பல வகை மிளகாயை வளர்த்து வருகிறார். இவர் பல ஆண்டுளாக காரமான உணவுகளை அதிகம் சாப்பிட்டு பழகி உள்ளார். காரமான மிளகாயின் வெப்பத்திற்கு உடலை பழக்க பல ஆண்டுகளாக பயிற்சி செய்துள்ளார்.

Also Read : தன்னை தானே கண்ணாடியில் பார்த்து அதிர்ந்த கரடி செய்த செயல்... வைரல் வீடியோ

அதனால் தான் இவர் உலகிலேயே அதிகாரமான மிளகாய் வகைளில் ஒன்றான Ghost Pepper-ஐ சாப்பிட்டு சாதனை நிகழ்த்தி இருக்கிறார். கலிபோர்னியாவின் சான்டியாகோவில் உள்ள ஒரு பொது பூங்காவில் இந்த ஸ்டண்ட் முயற்சி மேற்கொள்ளப்பட்டதை Guinness World Records அமைப்பு உறுதி செய்துள்ளது. இதனிடையே தனது இந்த சாதனை பற்றி கூறி இருக்கும் கிரிகோரி ஃபோஸ்டர், இந்த சாதனை முயற்சி என்னையும் மிளகாய் மீதான என் காதலையும் எவ்வளவு தூரம் நிரூபிக்க முடியும் என்பதை பார்ப்பதற்கான தனிப்பட்ட சவாலாக இருந்தது என்று குறிப்பிட்டு உள்ளார்.

Also Read : இங்க ஜெயில்ல ரொம்ப குளிர் அடிக்கும் - கவனம் ஈர்த்த காவல்துறையின் எச்சரிக்கை.!

top videos

    ஒரு நிமிடத்தில் அதிக Ghost Peppers சாப்பிட்டதற்காக கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளதை தவிர, கிரிகோரி ஃபோஸ்டர் ஏற்கனவே வேறு 2 சாதனைகளை படைத்துள்ளார். 120 கிராம் அல்லது 4.23 அவுன்ஸ் வரையிலான கரோலினா ரீப்பர் மிளகாயை ஒரு நிமிடத்தில் அவர் சாப்பிட்டுள்ளார். இது தவிர, 8.72 வினாடிகளில் மூன்று கரோலினா ரீப்பர் மிளகாயை வேகமாக சாப்பிட்டவர். முதல் சாதனை 2017-ஆம் ஆண்டிலும், இரண்டாவது சாதனையை 2021-ஆம் ஆண்டிலும் படைத்துள்ளார்.

    First published:

    Tags: Trending, Viral Video, World record