Home /News /trend /

பெற்ற பிள்ளைகளை போட்டோ எடுத்தது ஒரு குத்தமா? அப்பாவி நபர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்த பெண்!

பெற்ற பிள்ளைகளை போட்டோ எடுத்தது ஒரு குத்தமா? அப்பாவி நபர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்த பெண்!

மாதிரிபடம்

மாதிரிபடம்

U.S Pepper spray incident | டெக்சாஸ் மாநிலத்தில் ரசாயன சாதனங்களை விற்பது தடை செய்யப்பட்டிருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்கு பெப்பர் ஸ்பிரேவை வணிக நிறுவனங்கள் விற்பனை செய்ய விலக்களிக்கப்பட்டுள்ளது.

    தனது சொந்த குழந்தைகளை போட்டோ எடுத்துக்கொண்டிருந்த நபரை தவறாக நினைத்து, பெண் ஒருவர் பெப்பர் ஸ்பிரே அடித்த விநோத சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது.

    கடந்த செவ்வாய் கிழமை அன்று, வர்ஜீனியாவின் ஆர்லிங்டனில், பெண்டகன் சிட்டி மாலுக்கு ஆண் ஒருவர் தனது பிள்ளைகளுடன் சென்றுள்ளார். அங்கு தனது குழந்தைகளை நிற்க வைத்து தனது போனில் விதவிதமா போட்டோ எடுத்துள்ளார். இதனை கவனித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர், உடனடியாக மால் பாதுகாவலர்களிடம் புகார் அளித்துள்ளார். அதாவது சின்ன குழந்தைகளை அந்த நபர் அத்துமீறி புகைப்படம் எடுப்பதாக நினைத்து புகார் தெரிவித்துள்ளார்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மால் பாதுகாவலர்கள் அந்த நபரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அந்த நபர் குழந்தைகளின் தந்தை என்பதை பாதுகாவலர்கள் உறுதி செய்தனர். ஆனால் அந்த பெண்மணி பாதுகாவலர்கள் கூறிய விளக்கத்தில் சமாதானம் அடையாமல், தன்னிடம் இருந்த பெப்பர் ஸ்பிரேவை அந்த நபரின் முகத்தில் அடித்துவிட்டு, தப்பியோடியுள்ளார்.

    இதனால் பலத்த காயம் மற்றும் எரிச்சலுக்கு ஆளான நபருக்கு சம்பவ இடத்திலேயே மருத்துவர்கள் அவசர சிகிச்சை அளித்துள்ளனர். தற்போது அந்த நபர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தப்பியோடிய பெண்மணியை தேடி வருகின்றனர்.

    Read More: பெண் பயிற்சியாளரை பலமுறை தாக்கிய டால்பின்.. கேமராவில் சிக்கிய 'திக் திக்' நிமிடங்கள்!


    போலீசார் வெளியிட்டுள்ள தகவலின் படி, சந்தேகத்திற்கிடமான பெண் சராசரி உடலமைப்பு கொண்டவர் என்றும், 20 வயதுக்கு மேல் 30 வயதுக்குள் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். நீல நிற ஜீன்ஸ் ஜாக்கெட், வெள்ளை சட்டை அணிந்திருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. உயிருக்கே ஆபத்து ஏற்படும் வகையில் அடையாளம் தெரியாத நபர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்ததற்காக அந்த பெண்மணியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    டெக்சாஸ் மாநிலத்தில் ரசாயன சாதனங்களை விற்பது தடை செய்யப்பட்டிருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்கு பெப்பர் ஸ்பிரேவை வணிக நிறுவனங்கள் விற்பனை செய்ய விலக்களிக்கப்பட்டுள்ளது. இது பெண்கள் பெரும்பாலும் தனக்கு ஆபத்து நேரும் போது அதிலிருந்து தப்பிக்க பயன்படுத்தும் தற்காப்பு கருவியாகும். ஆனால் அதனை இப்படி தவறாக பயன்படுத்துவது அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதற்கு முன்பு 2014ம் ஆண்டு ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தின் ஆர்லிங்டன் வளாகத்தில் பேராசிரியர் ஒருவர் தனது விரிவுரையின் போது பெப்பர் ஸ்ப்ரேயால் தாக்கப்பட்டார். இதை செய்ததாக ஜொனாதன் பெண்டில்டன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். பெப்பர் ஸ்பிரே தாக்குதலால் பேராசிரியர் மட்டுமின்றி 15 மாணவர்களும் பாதிக்கப்பட்டனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட நபர் தப்ப முயன்ற போது தன்னை தடுத்து நிறுத்திய மாணவன் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தியதற்காகவும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த போது வகுப்பில் விழிப்புணர்வு தொடர்பான பாடம் நடந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: America

    அடுத்த செய்தி