கான்ஜுரிங் திகில் படம் எடுக்க காரணமான நிஜ பண்ணை வீட்டில் தொடரும் அமானுஷ்யங்கள்!

2013-ல் முதுகெலும்பை உறைய வைக்கும் வகையில் வெளிவந்த சிறந்த பேய் படமான "தி கான்ஜுரிங்" திரைப்படம் இந்த வீட்டில் இவர்கள் வசிக்க ஊக்கமளித்துள்ளது.

  • Share this:
உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட சில திகில் திரைப்படங்கள் நம்மை மிகவும் பயமுறுத்துகின்றன. ஏனென்றால் நம்மை மிகவும் பயமுறுத்தும் பல திரைப்படங்கள் ஏற்கனவே இருக்கும் பேய் வீடுகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படுகின்றன. அவை உண்மையில் நிகழ்ந்த சில அமானுஷ்ய விஷயங்களுடன் தொடர்புபடுத்தி படமாக்கப்படுவதால் கூடுதலாக நமக்கு பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்துகின்றன. பலருக்கு பேய் வீடுகளில் வாழ தைரியம் இல்லை.

ஆனால் அமெரிக்காவில் ஒரு குடும்பம் பேய் வீடு என்றழைக்கப்படும் ஒரு வீட்டில் தற்போது வசித்து வருகிறது. 2013-ல் முதுகெலும்பை உறைய வைக்கும் வகையில் வெளிவந்த சிறந்த பேய் படமான "தி கான்ஜுரிங்" திரைப்படம் இந்த வீட்டில் இவர்கள் வசிக்க ஊக்கமளித்துள்ளது. அமெரிக்காவின் ரோட் தீவின் (Rhode Island) ஹாரிஸ்வில்லில் (Harrisville) உள்ள ஒரு பிரபலமற்ற சபிக்கப்பட்ட பண்ணை வீடு அமானுஷ்ய நடவடிக்கைகளின் புலனாய்வாளர்களான எட்வர்ட் வாரன் மைனி மற்றும் லோரெய்ன் ரீட்டா வாரன் (Edward Warren Miney and Lorraine Rita Warren) ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.

Also Read : கணவரை பிரிந்த பள்ளி ஆசிரியை 12-ம் வகுப்பு மாணவனுடன் மாயம்... அதிர்ச்சி சம்பவம்

இந்த புகழ்பெற்ற பேய் பண்ணை வீடு ஒரு உண்மையான கதையை அடிப்படையாகக் கொண்ட "தி கன்ஜூரிங்" என அழைக்கப்படும் 2013 ஆம் ஆண்டின் ஹிட் திகில் படத்திற்கு உத்வேகம் அளித்தது. இந்த பண்ணை வீட்டை கோரி மற்றும் ஜெனிபர் ஹெய்ன்ஜோன் (Cory and Jennifer Heinzon) ஆகியோர் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வாங்கினர். அவர்கள் குறிப்பிட்ட அந்த பண்ணை வீட்டில் குடியேறிய 2 மாதங்களுக்கு பிறகு அந்த வீட்டில் நடந்த சில விசித்திர மற்றும் வினோத நிகழ்வுகளை பற்றி ஒரு உள்ளூர் செய்தி நிலையத்திற்கு தெரிவித்தனர்.

பெட் ரூம்கள், 2 பாத்ரூம்கள் கொண்ட விசாலமான இந்த பண்ணை வீட்டை அமானுஷ்ய புலனாய்வாளர்களாக இருந்த இந்த ஜோடி, அதன் திகில் வரலாற்றிற்காக 439,000 டாலருக்கு (ரூ.3,21,00,000) வாங்கியது. கோரி மற்றும் ஜெனிபர் ஹெய்ன்ஜோனின் மகளான மேடிசன் ஹெய்ன்சன்(Madison Heinzen) தங்களது பண்ணை வீட்டில் நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகளை ஆவணப்படுத்தி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் தனது முதல் அனுபவங்களை ஊடகங்கள் மற்றும் டிக்டாக்கில் பகிர்ந்து கொண்டார். அந்த வீட்டில் இன்னும் வசிக்கும் “ஆவி சக்திகள்” பற்றி வீடியோ ஷேரிங் தளங்களில் பண்ணை வீட்டில் அவர்களின் அன்றாட வாழ்க்கையை விவரிப்பதன் மூலம் அவர் ஒரு பெரிய ஃபாலோயர்ஸ்களை குவித்துள்ளார்.

நியூயார்க் போஸ்ட்டின் கூற்றுப்படி, மேடிசன் ஹெய்ன்சன், முக்காடு மற்றும் பாவாடை அணிந்த (திருமண உடை அணிந்த) ஒரு பெண் உருவம் மெல்லிய காற்றில் மறைவதை கண்ணால் பார்த்ததாக ஒரு வீடியோவில் கூறி உள்ளார். தனியாக இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது மூன்றே வினாடிகளில் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று அவர் கூறுகிறார். தனது பெற்றோரும் அந்த அமானுஷ்ய உருவத்தை பார்த்துள்ளதாக உறுதிப்படுத்தினார்.மேலும் குறிப்பிட்ட அந்த பண்ணை வீட்டில், "தானாக ஒளிரும் விளக்குகள், காலடி தடங்கள், யாரோ நடப்பது போன்ற ஓசை, கதவுகள் தானாக திறப்பது, கதவுகள் தட்டப்படும் ஓசை" உள்ளிட்ட பல அமானுஷ்யங்களை அனுபவித்ததாக அந்த தம்பதியர் ஒப்பு கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் பயப்படுவதாகவும் ஒப்புக்கொண்டனர்.

ஏனெனில் அந்த வீட்டில் இருப்பதாக கூறப்படும் ஆவிகள் முதலில் நட்பாக இருந்ததாகவும், சில காலத்திற்கு பின் அவை கெட்டவையாக மாறி குடும்பத்தை தாக்குகின்றன எ என்று கூறியுள்ளார். ஒரு வீடியோவில் தாங்கள் பொதுமக்கள் பார்வையிட தங்கள் வீட்டைத் திறந்துவிட்டதாக மேடிசன் குறிப்பிட்டுள்ளார். மேலும் வீட்டைச் சுற்றி 12 கேமராக்களை நிறுவுவதன் மூலம் குடும்பத்தினர் தனிப்பட்ட முறையில் நிகழ்வுகளை ஆவணப்படுத்துகிறார்கள்.

 
Published by:Vijay R
First published: