கஞ்சா புகைக்க மாதம் ₹2 லட்சம் சம்பளம் தர தயாராக இருக்கும் நிறுவனம்... 🙄

இந்த வேலைக்கு மாதம் 2.15 லட்சம் ரூபாய் சம்பளமும் வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் விதவிதமான கஞ்சா ரகங்களை சுவைத்து விமர்சிக்க வேண்டும்.

கஞ்சா புகைக்க மாதம் ₹2 லட்சம் சம்பளம் தர தயாராக இருக்கும் நிறுவனம்...  🙄
கஞ்சா செடிகள்
  • News18
  • Last Updated: November 22, 2019, 9:47 PM IST
  • Share this:
கஞ்சா புகைப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் மாதம் 2.15 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்து உங்களை பணிக்கு அமர்த்தத் தயாராக உள்ளது இந்த அமெரிக்க நிறுவனம்.

’American Marijuana’ என்னும் கஞ்சா மருத்துவ ஆன்லைன் இதழ் ஒன்று கஞ்சாவின் மருத்துவப் பயன்பாடுகள் குறித்து ஆராய்ச்சி செய்து செய்திகள் வெளியிட்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போது கஞ்சா புகைக்க விரும்புபவர்களை பணியமர்த்தத் தேடி வருகிறது.

இந்த வேலைக்கு மாதம் 2.15 லட்சம் ரூபாய் சம்பளமும் வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் விதவிதமான கஞ்சா ரகங்களை சுவைத்து விமர்சிக்க வேண்டும். இதுதான் பணி. பணிக்குச் சேர விரும்புவோர் தங்களது இருப்பிடத்தில் கஞ்சா சட்டப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை.


இந்த ஆன்லைன் இதழின் முதன்மை ஆசிரியர் ட்வைட் ப்ளேக் கூறுகையில், “இந்தப் பணி குறித்த விவரங்கள் அனைத்துமே உண்மையானது. இதுவரையில் இந்தப் பதவிக்காக 3 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன” என்றுள்ளார்.

மேலும் பார்க்க: கஞ்சா பயன்படுத்த மேலும் ஒரு இந்திய மாநிலத்துக்கு அனுமதி..!
First published: November 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்