Home /News /trend /

நோட்டீஸ் பீரியட்டில் இருக்கும் ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு வழங்கும் அமெரிக்க நிறுவனம்!

நோட்டீஸ் பீரியட்டில் இருக்கும் ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு வழங்கும் அமெரிக்க நிறுவனம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நோட்டீஸ் பீரியட்டில் இருக்கும் ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு அளிப்பதாக அறிவித்துள்ள அமெரிக்க நிருவனம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • international, IndiaAmericaAmericaAmerica
நிறுவனத்தை விட்டு வெளியேறும் ஊழியர்களின் வேலைத் திறனை ஊக்குவிக்கும் முயற்சியாக Gorilla 76 என்ற அமெரிக்க நிறுவனம் நோட்டீஸ் பீரியட்டில் உள்ள ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு அளிக்கிறது.

பல்வேறு காரணங்கள் காரணமாக ஊழியர்கள் தங்கள் வேலைகளை மாற்ற வேண்டிய முடிவுகளை எடுக்கிறார்கள். பெரும்பாலும் ஊதிய உயர்வு மற்றும் நல்ல எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இருக்கும் நிறுவனத்தை விட்டு வேறு நிறுவனங்களுக்குச் செல்கிறார்கள்.

இந்நிலையில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நிறுவனம் ஒன்று நோட்டீஸ் பீரியட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வழக்கம் போல வேலைகளில் ஆர்வத்தை வர வைக்க மற்றும் நிறுவனத்தில் வேலை செய்யும் கடைசி நாள் வரை வசதியான அனுபவத்தைத் தர புதிய சலுகை ஒன்றை அறிவித்து உள்ளது.

நிறுவனத்தை விட்டு வெளியேறும் ஊழியர்களின் வேலைத் திறனை ஊக்குவிக்கும் முயற்சியாக Gorilla 76 என்ற அமெரிக்க நிறுவனம் நோட்டீஸ் பீரியட்டில் உள்ள ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு அளிக்கிறது. ஆம், நீங்கள் படித்தது சரி தான். இந்நிறுவனத்தின் நிறுவனர் வெளியிட்டுள்ள ஒரு போஸ்ட் தற்போது LinkedIn-ல் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Also Read : சோறு தான் முக்கியம்.... ஸ்கை டைவிங்கில் உணவை ருசித்து சாப்பிட்ட பெண்ணின் வீடியோ வைரல்!

இது குறித்த தகவலை ஷேர் செய்துள்ள Gorilla 76 நிறுவனத்தின் நிறுவனர் ஜான் ஃபிராங்கோ, "எங்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதற்கான அவர்களின் முடிவைப் பற்றி ஒரு ஊழியர் எங்களிடம் சொன்ன தருணத்திலிருந்து, எங்களுக்குக் குறைந்தபட்சம் 6 வாரங்கள் நோட்டீஸ் பீரியட் வழங்கும் முழுநேர ஊழியருக்கு மீதமுள்ள தொகைக்கு 10% சம்பள உயர்வு வழங்கப்படும்.

அதே போல 3 மாதங்களுக்குள் நிறுவனத்தை விட்டு வெளியேறக் கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் உறுதியளிக்கிறோம், கடினமான உணர்வுகள் அல்லது கசப்பான அனுபவங்கள் இருக்காது என்று கூறி இருக்கிறார் ஜான் ஃபிராங்கோ.

தங்களது இந்த நடவடிக்கை ஊழியர்கள் தங்கள் நிறுவனத்தில் இருக்கும் வரை உற்சாகமாக வேலை செய்ய ஊக்குவிக்கிறது, ஊழியர்கள் தங்கள் கேரியரில் முன்னேறுவதற்கான நேரத்தையும் வழங்குகிறது என்றும் கூறி இருக்கிறார். இருப்பினும் நிச்சயமாக ஊழியர் ஒருவர் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதை தாங்கள் விரும்பவில்லை.

ஆனால் அவர்கள் ஓய்வு பெறும் நிமிடமே வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம். தங்களின் புதிய அணுகுமுறை வேலையிலிருந்து மாறும் ஊழியர்களுக்குத் தடையற்ற அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதே என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

Also Read : வீட்டுக்குள் இருந்தவரை தாக்கிய மின்னல் - நிஜத்தில் ஒரு 'மின்னல் முரளி’

சமீபத்தில் ஷேர் செய்யப்பட்ட இந்த போஸ்ட் ஆயிரக்கணக்கான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை பெற்று வருகிறது. இது ஒரு சிறந்த நடைமுறை, ஊழியர்கள் சிறந்ததை தேர்வு செய்ய எப்போதும் நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று பல நெட்டிசன்கள் பாராட்டி உள்ளனர்.

ஒருவேளை குறிப்பிட்ட ஊழியர் நோட்டீஸ் பீரியட் கொடுத்த பிறகு அவருக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று ஒரு யூசர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள ஜான் ஃபிராங்கோ, உண்மையில் யாரும் அப்படிச் சொல்வதில்லை. சில நேரங்களில் வெளியேற விரும்பும் ஊழியர்களுக்குத் தகுந்த வேலையைக் கண்டுபிடிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். இது ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
Published by:Janvi
First published:

Tags: Employment, LinkedIn, Viral

அடுத்த செய்தி