பெற்றோர் திட்டியதால் ரூ.1.5 லட்சத்துடன் கோவாவுக்கு சென்ற சிறுவன்.. மடக்கிப்பிடித்த போலீஸ்.. நடந்தது என்ன?
பெற்றோர் திட்டியதால் ரூ.1.5 லட்சத்துடன் கோவாவுக்கு சென்ற சிறுவன்.. மடக்கிப்பிடித்த போலீஸ்.. நடந்தது என்ன?
கோவா (கோப்புப் படம்)
கோவா காவல்துறையினரும் அங்குள்ள டிராவல் ஏஜென்சிகளுக்கு சிறுவன் குறித்த தகவல்களை அளித்து, தங்களிடம் ரிப்போர்ட் (Report) செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
குஜராத்தில் பெற்றோர் திட்டியதால் கோபமடைந்த சிறுவன், வீட்டிலிருந்த ரூ.1.5 லட்சம் பணத்துடன் கோவாவுக்கு ஓடிச்சென்று நைட் கிளப், ஓட்டல் என சொகுசாக பணத்தை செலவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், வதோதராவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் படிப்பில் உரிய கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால், பெற்றோர் சிறுவனை திட்டியுள்ளனர். மனமுடைந்த சிறுவன் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து, வீட்டிலிருந்த ரூ.1.5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறியுள்ளார். வதோதராவில் இருந்து அந்த சிறுவன் கோவா( Goa) செல்ல திட்டமிட்டுள்ளார்.
முதலில், ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்ற சிறுவன் கோவாவுக்கு டிக்கெட் எடுக்க முயன்றுள்ளார். ஆதார் இல்லாததால் அவனால் டிக்கெட் எடுக்க முடியவில்லை. பின்னர், வதோதரா பேருந்து நிலையத்துக்கு சென்ற சிறுவன், அங்கிருந்து பேருந்து மூலம் பூனே சென்று பின்னர் கோவா சென்றடைந்துள்ளார். கோவாவில், தான் கொண்டு வந்திருந்த ரூ.1.5 லட்சம் பணத்தை நைட் கிளப், ஓட்டல் என சொகுசாக செலவிட்டுள்ளார். Goan night club-ல் மட்டும் சிறுவன் அதிக பணத்தை செலவழித்துள்ளான்.
கோவாவில் தனது செல்போனுக்கு புதிய சிம்கார்டு (Sim card) ஒன்றையும் வாங்கியுள்ளார். பின்னர், பணம் கரைந்ததால் வீட்டுக்கு செல்ல முடிவெடுத்த சிறுவன், கோவால் டிராவல் ஏஜெண்ட் (Travel agent) அலுவலகத்துக்கு சென்று வதோதராவுக்கு பேருந்து புக் செய்துள்ளார். இதனிடையே, சிறுவன் வீட்டிலிருந்து வெளியேறியதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் வதோதரா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுவனின் செல்போன் மூலம் அவனது நகர்வுகளை தொடர்ந்து கண்காணித்து வந்த காவல்துறையினர், சிறுவன் கோவாவில் இருப்பதை கண்டுபிடித்து அங்கிருக்கும் காவல்துறைக்கு இது குறித்து தகவல் அளித்தனர்.
கோவா காவல்துறையினரும் அங்குள்ள டிராவல் ஏஜென்சிகளுக்கு சிறுவன் குறித்த தகவல்களை அளித்து, தங்களிடம் ரிப்போர்ட் (Report) செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். அதைபோலவே சிறுவனும் தனியார் டிராவல் ஏஜென்சிக்கு சென்றபோது, அங்குவைத்து பிடித்த காவல்துறையினர் டிசம்பர் 26ம் தேதி அவனை குஜராத் மாநிலம் வதோதராவுக்கு அனுப்பி வைத்தனர். வதோதரா காவல்துறையினரும் சிறுவனை கடுமையாக எச்சரித்து பின்னர் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பஞ்சாப்பை சேர்ந்த 17 வயது சிறுவன் பப்ஜி கேமில் (PUBG Game ) வெடிமருந்து வாங்குவதற்காக, பெற்றோரின் வங்கிக்கணக்கில் சேமிப்பு பணம் ரூ.17 லட்சத்தை செலவழித்திருந்தான். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அந்த சிறுவனை ஸ்கூட்டர் பழுது பார்க்கும் கடைக்கு வேலைக்கு அனுப்பினர். அவரைப்போல், வதோதரா சிறுவனும் செய்திருப்பது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.