தாயின் பேச்சை கேட்டு காதலை முறித்து கொண்ட காதலி... காதலன் எடுத்த விபரீத முடிவு

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

  • Share this:
ஒரு தலை காதல், காதலை ஏற்க மறுத்தவர் மீது கொலைவெறி தாக்குதல் போன்ற சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து வருகிறது. தற்போது காதலை முறித்து கொண்ட காதலியை பழிவாங்க காதலன் விபரீத முடிவு ஒன்றை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சஞ்சய் மூர்த்தி என்பவர் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்கள் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த பெண் தன் காதலை முறித்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் மூர்த்தி அவரது முன்னாள் காதலியிடம் பல முறை முறையிட்டுள்ளார். ஆனால் அவர் மீண்டும் அவரது காதலை ஏற்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் மூர்த்தி தனது முன்னாள் காதலியின் வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அத்துடன் மட்டுமில்லாமல் அந்த பெண் வீட்டிற்கு வெளியே நிறுத்திருந்த அவரது ஸ்கூட்டியை தீவைத்து எரித்துள்ளார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், எனது தாயார் எங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் எங்களுடைய காதலை கடந்த வருடம் முறித்து கொண்டோம். ஆனால் அதன் பிறகும் சஞ்சய் மூர்த்தி எங்கள் வீட்டின் அருகே எனக்கும், எனது தாய்க்கும் கொலை மிரட்டல் விடுத்து வந்தார். உடனே அவருடன் பேச மறுத்துவிட்டு அங்கிருந்து நான் வந்துவிட்டேன்“ என்று தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தள்ளனர்.
Published by:Vijay R
First published: