ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

விராட் கோலியால் தீபாவளிக்கு இவ்வளவு நஷ்டமா? இப்படியும் நடக்குது லாஸ்!

விராட் கோலியால் தீபாவளிக்கு இவ்வளவு நஷ்டமா? இப்படியும் நடக்குது லாஸ்!

விராட் கோலி

விராட் கோலி

கிரிக்கெட் போட்டி தொடங்கிய ஒன்றரை மணியிலிருந்து யூபிஐ பரிவர்த்தனைகள் குறைய தொடங்கி விட்டன.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகத்தையே தலைகீழாக புரட்டிப் போட்டாலும், ஒரு சில விஷயங்கள் மாறாது. அதில் பண்டிகை கால ஷாப்பிங்கும் ஒன்று. என்ன நடந்தாலும் சரி, பண்டிகைக்கு தேவையான பொருட்களை கடைசி நிமிடம் வரை வாங்கும் பழக்கம் உள்ளது. சிலர் திட்டம் போட்டு வாங்குவார்கள், சிலர் கடைசி நிமிடங்களில் வாங்குவார்கள். அதிலும், ஆன்லைன் ஷாப்பிங் வசதியாக இருக்கும் நேரத்தில், தீபாவளிக்கு ஓரிரு வாரங்கள் முன்பிருந்தே ஆன்லைன் ஷாப்பிங், டிஜிட்டல் பேமென்ட், UPI பரிவர்த்தனைகள் என்று நான்-ஸ்டாப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான விராட் கோலியால், நாடு முழுவதும் தீபாவளி ஷாப்பிங் உறைந்து போனது!

கிரிக்கெட்டா தீபாவளியா என்ற கண்களுக்கு தெரியாமல் நடந்த போட்டியில் கிரிக்கெட் வென்றிருக்கிறது.

அக்டோபர் 23 ஆம் தேதி அன்று நடைபெற்ற அக்டோபர் 23 ஆம் தேதி மதியம் 1:30 மணி வரைக்கும் தீபாவளிக்கான ஷாப்பிங் அதிக அளவு நடைப்பெற்றது ஆன்லைன் ஷாப்பிங்கில் வீட்டில் இருந்தபடியே மொபைல் மற்றும் கணினியில் ஆன்லைன் ஷாப்பிங் இதுவரை இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட நபர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்தனர் என்று அறிக்கை கூறியிருக்கிறது ஆனால் விளையாட்டு கிரிக்கெட் மேட்ச் தொடங்கிய உடனே அது அந்த ஷாப்பிங்கின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துள்ளது.

Read More : சச்சின் டெண்டுல்கரின் மேலும் ஒரு சாதனையை முறியடித்த விராட் கோலி..

உலகக்கோப்பை போட்டிகள் மட்டுமல்லாது. எந்த இடத்திலும் இந்தியா பாகிஸ்தான் மேட்ச் என்றாலே நாடு முழுவதுமே தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன் அமர்ந்து விரும். உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோற்றதே இல்லை என்ற வரலாறு ஆண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. பாகிஸ்தானை எதிர்கொள்ளும் எல்லா போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வமும் இப்போது வரை குறையாமல் இருக்கிறது.

அக்டோபர் 23 ஆம் தேதி அன்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், கடைசி நேர தீபாவளி ஷாப்பிங் என்பதைக் கூட மறந்து பெரும்பாலான இந்தியர்கள் கிரிக்கெட் மேட்ச் பார்த்தனர்.

பொதுவாக கடைசி நிமிடங்களில் இதய துடிப்பை எகிறச் செய்து, உயர் ரத்த அழுத்த நிலை கொண்டு, வெற்றி பெறுவோமா மாட்டோமா என்றெல்லாம் நிலை குலைய வைத்து இறுதில் கிடைக்கும் வெற்றி மிகப்பெரி அலாதியான சந்தோஷத்தை தரும். அதே போன்ற ஒரு வரலாற்று வெற்றியை தான் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி பெற்றிருக்கிறது.

இது விராட் கோலியின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்று உலகம் முழுவதிலும் பாராட்டை பெற்று வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிக்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆனால் இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்பது இந்த கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நேரத்தில் ஆன்லைன் ஷாப்பிங்கில் யூபிஐ பரிவர்த்தனைகள் கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்று அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது.

Read More : காக்கா முட்டை படம் போல ரியல் சம்பவம்.. இணையத்தில் வைரலான 10 ரூபாய் பர்கர் சிறுமி!

அக்டோபர் இருபத்தி மூன்று ஆம் தேதி, இந்திய நேரப்படி இந்த கிரிக்கெட் போட்டி மதியம் 1:30 க்கு தொடங்கியது. அன்று காலை 10:30 மணியிலிருந்து 12:30 மணி வரை மிக அதிக அளவிலான யூபிஐ பரிவர்த்தனைகள் காணப்பட்டன.

ஆனால் கிரிக்கெட் போட்டி தொடங்கிய ஒன்றரை மணியிலிருந்து யூபிஐ பரிவர்த்தனைகள் குறைய தொடங்கி விட்டன. தீபாவளிக்கு முந்தைய நாள் ஷாப்பிங் கூட தேவையில்லை என்ற அளவுக்கு கிரிக்கெட்டின் மீது அவ்வளவு ஆர்வமும் பக்தியும் கொண்டிருக்கின்றனர்.

பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 159 ரன்கள் எடுத்த நிலையில், முஹ்டல் இன்னிங்ஸ் முடிந்த பிறகு மீண்டும் யூபிஐ பரிவர்த்தனைகள் பதிவானது. அதாவது மக்கள் ஷாப்பிங் இடைப்பட்ட காலத்தில் மீண்டும் ஷாப்பிங் செய்யத் தொடங்கினர். அதற்கு பிறகு 3:30 மணி க்கு இந்தியா மீண்டும் விளையாட தொடங்கும் பொழுது மறுபடியும் யூபிஐ பரிவர்த்தனையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது. ஷாப்பிங் செய்வதை நிறுத்திவிட்டு மக்கள் கிரிக்கெட் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர் என்பது உறுதியாக இருக்கிறது.

குறிப்பாக கடைசி சில ஓவர்கள் இருக்கும்போது கிட்டத்தட்ட யூபிஐ பரிவர்த்தனைகள் எதுவுமே இல்லை என்று கூறும் அளவுக்கு அதனுடைய எண்ணிக்கை குறைந்துவிட்டது. மாலை 4:30 மணியிலிருந்து 5:30 மணி வரை அதாவது இந்தியா வெற்றி பெறும் வரை, காலையில் காணப்பட்ட யூபிஐ பரிவர்த்தனைகள் எண்ணிக்கையோடு ஒப்பிடும் பொழுது -6% முதல் -20% வரை பரிவர்த்தனைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Cricket, Deepavali, Virat Kohli