Home » News » Trend

ஓவர் லவ், ஒரு சண்டை கூட இல்ல... டைவர்ஸ்க்கு மனைவி சொன்ன ஷாக் ரீசன்

சமைப்பதற்கு, வீட்டு வேலைக்கு கூடு உதவும் அவரது அதீத அன்பு தனக்கு அசௌகரியமாக உள்ளதாக மனைவி தெரிவித்துள்ளார்.

ஓவர் லவ், ஒரு சண்டை கூட இல்ல... டைவர்ஸ்க்கு மனைவி சொன்ன ஷாக் ரீசன்
மாதிரிப் படம்
  • Share this:
திருமணமாகி ஒரு சண்டை கூட போடமல் கணவர் ஓவர் லவ்வாக இருப்பதால் மனைவி விவாகரத்து கோரியிருக்கிறார்.

வரதட்சனை கொடுமை, கணவன் துன்புறத்தல் உள்ளிட்ட காரணங்களால் மனைவி விவாகரத்து கோரியிருப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் கணவன் சண்டையே போடாததால் மனமுடைந்த பெண் விவாகரத்து கோரியிருக்கும் சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்தேறி உள்ளது.

உத்திரபிரதேசம் சம்பல் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு பெண் தன் கணவர் திருமணமான 18 மாதங்களாக ஒரு சண்டை கூட போடவில்லை, ஒவர் லவ்வாக இருப்பதால் விவாகரத்து கோரியுள்ளார். மேலும் சமைப்பதற்கு, வீட்டு வேலைக்கு கூட உதவும் அவரது அதீத அன்பு தனக்கு அசௌகரியமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.


அந்த பெண் எந்த தவறு செய்தாலும் அவரது கணவர் மன்னித்துவிடுகிறாராம், ஒரு வார்த்தை கூட திட்டுவதில்லை, என்னுடைய எல்லா செயல்களுக்கும் ஒத்துப்போகிறார் என அவர்மீது குறை சொல்லி இருக்கிறார் அந்த பெண். இதனால் நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்ட அந்த பெண்ணின் காரணம் சரியாக இல்லை எனக் கூறி நீதிமன்ற அலுவலர் அவரது மனுவை நிராகரித்துள்ளார்.

அப்போதும் அந்த பெண் விடாமல் உள்ளூர் பஞ்சாயத்தில் தனது பிரச்னையை கொண்டு சென்றுள்ளார். அவர்களும் வேறு ஏதும் காரணமில்லை என்பதால் அதனை நிராகரித்துவிட்டனர்.



அந்த பெண்ணின் விவாகரத்துக்கும் அவரது கணவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் சம்மதம் தெரிவித்துள்ளார் என்பது தான் மற்றொரு ஆச்சரியம். ஆனால் காரணம் சரியாக இல்லாததால் அவர்களுக்கு பேசி நல்ல முடிவினை எடுக்குமாறு அனுப்பி வைத்துள்ளனர்.
First published: August 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading