உத்தரப்பிரதேசத்தில் திருடிய பணம் மிகப்பெரிய தொகையாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த திருடனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, அந்தப் பணத்தில் சிகிச்சை எடுத்த சுவாரஸ்ய நிகழ்வு வெளிசத்துக்கு வந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் இரண்டு கொள்ளையடிக்க சேர்ந்து கொள்ளையடிக்க சென்றுள்ளனர். சர்வீஸ் சென்டர் ஒன்றில் திருடுவதற்கு முயற்சி செய்த அவர்கள், தங்களின் திட்டத்தை சரியாக அரங்கேற்றி பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். பின்னர், அந்தப் பணத்தை ஒரு இடத்தில் வைத்து இருவரும் எண்ணிப் பார்க்கும்போது, கற்பனைக்கு எட்டாத தொகையாக அவர்களுக்கு தெரிந்துள்ளது. அதில் ஒருவருக்கு அப்போது நெஞ்சுவலி ஏற்பட்டு, உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், கொள்ளையடித்த பணத்தில் பெரும் தொகையை மருத்துவச் செலவுக்கு செலவழித்ததும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த கொள்ளை சம்பவமானது உத்தரப்பிரதேச மாநிலம், கோட்வாலி டெகாட் பகுதியில் ஒருமாத த்துக்கு முன்பு நடந்ததுள்ளது. அந்தப் பகுதியில் நவாப் ஹைதர் என்பவர் பொது சேவை மையம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 16 ஆம் தேதி நள்ளிரவில் அந்த சேவை மையத்துக்குள் நுழைந்த கொள்ளையர்கள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஹைதர், அப்பகுதி காவல்நிலையத்தில் கொள்ளை குறித்து புகார் அளித்தார். தனது சேவை மையத்தில் இருந்து 7 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
அவரின் புகாரை பதிவு செய்து கொண்ட காவல்துறையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். கடந்த புதன்கிழமை அலிப்பூர் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு கொள்ளையர்களான நவுசத் மற்றும் இஜாஸ் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் கொள்ளையடிக்கப்பட்ட பணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, நவாப் ஹைதருக்கு சொந்தமான பொது சேவைமையத்தில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்ட அவர்கள், அந்த பணத்தை செலவழித்தது குறித்த சுவாரஸ்யமான கதையையும் தெரிவித்துள்ளனர்.
அதாவது, பொதுசேவை மையத்தில் கொள்ளையடித்த பணம் தங்களின் கற்பனைக்கு எட்டாத மிகப்பெரிய தொகையாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், பணம் மிகப்பெரிய தொகையாக இருந்ததால் மகிழ்ச்சியாக இருந்த அதே நேரத்தில் பயமும் ஏற்பட்டதாக தெரிவித்த கொள்ளையர்கள், அதில் ஒருவருக்கு உடனடியாக நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்தும் கூறியுள்ளனர். கொள்ளையடித்த பணத்தில் பெரும் தொகையை சிகிச்சைக்காக செலவழித்ததையும் கொள்ளையர்கள் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் பின்னர் சிறையில் அடைத்தனர். இதேபோல் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அண்மையில் தாய்லாந்தில் நடைபெற்றுள்ளது.
Also read... மணப்பெண் தேடித்தருமாறு போலீசில் புகார் அளித்த உ.பி நபர்... நாடு முழுவதிலும் இருந்து குவியும் வரன்கள்!
22 வயதான கொள்ளையன் ஒருவன் பெட்சபூன் பகுதியில் வீடு ஒன்றில் புகுந்து திருட சென்றுள்ளார். அப்போது, படுக்கையறை ஒன்றில் நுழைந்த திருடன், சொகுசு படுக்கை மற்றும் ஏ.சியை பார்த்ததும் சிறிது நேரம் தூங்க முடிவெடுத்து அசந்து தூங்கியுள்ளார். அந்தநேரத்தில் விழித்துக்கொண்ட வீட்டின் உரிமையாளர், தனது மகளின் படுக்கையறைக்குள் ஒருவர் தூங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். ஏனெனில், அவரது மகள் அன்று வெளியே சென்றிருந்துள்ளார். பின்னர், கொள்ளையன் என்பதை அறிந்துகொண்ட வீட்டின் உரிமையாளர், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.