பெண்ணின் மீது ஏறி அமர்ந்து போலீஸ் தாக்குதல் - காவல்துறை மறுப்பு

வீடியோ காட்சிகள்

கான்பூரில் பெண்ணின் மீது ஏறி அமர்ந்து போலீசார் தாக்கும் வீடியோ ஒன்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 • Share this:
  உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் தேஹாட் என்ற மாவட்டத்தில் போலீசாருக்கும் பெண் ஒருவருக்கும் இடையே நடக்கும் மோதல் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்ததாக கூறப்படுகிறது.

  துர்கதாஸ்பூர் என்னும் கிராமத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சிவம் யாதவ் என்பவரை போலீசார் தேடி உள்ளளனர். அப்போது சிவம் யாதவின் மனைவி ஆர்த்திக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டுள்ளது.

  இந்த மோதலின் போது பெண் மீது போலீசார் ஏறி அமர்ந்து தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட் ஆர்த்தி கூறுகையில், அவர் என்னை அறைந்து கீழே தள்ளினார். அதன் பின் என் மீது ஏறி அமர்ந்து தாக்குதல் நடத்தினர். கிராமத்தினர் தலையிட்டு என்னை மீட்டனர் என்றுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்நிலையில் இந்த வீடியோ குறித்து தேஹத் பகுதி எஸ்.பி விளக்கமளித்துள்ளார். காவலரை பணி செய்ய விடாமல் பெண் தடுத்தி நிறுத்திய போது இருவருக்கும்  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த பெண் மீது காவல் அதிகாரி தடுமாறி விழுந்தார். அந்த பெண் தான் காவலரின் காலரை பிடித்திருப்பது வீடியோவில் தெரியும்.

  அந்த பெண்ணும், குடும்பத்தினரும் காவலரை தடுத்ததால் அவர் கோபத்துடன் நடந்து கொண்டார். யாதவ் என்பவர் நண்பர்களுடன் இணைந்து சூதாட்டம் நடத்திய போது பிடிப்பட்டார். அப்போது தான் அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் போலீசாருடன் மோதலில் ஈடுப்பட்டுள்ளனர் என்றுள்ளார் எஸ்.பி.

  மேலும் காவல் அதிகாரி பெண்ணை தாக்கியதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது குறித்து நாங்கள் முறையான விசாரணை நடத்துவோம். பாகுபாடற்ற விசாரணை நடத்தி இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுப்போம் என்று எஸ்.பி உறுதி அளித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: