மணப்பெண் தேடித்தருமாறு போலீசில் புகார் அளித்த உ.பி நபர்... நாடு முழுவதிலும் இருந்து குவியும் வரன்கள்!

மன்சூரி

தனது சகோதரனுடன் சேர்த்து அழகுசாதன பொருட்கள் விற்கும் கடையை வைத்து நடத்தும் மன்சூரிக்கு, இப்போது நாடு முழுவதும் இருந்து திருமண வரன்கள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
உத்தரபிரதேசத்தின் கைரானாவில் வசிக்கும் 2 அடி உயரமுள்ள அசிம் மன்சூரி, சமீபத்தில் ஷம்லி காவல்துறையை அணுகி பொதுசேவை அடிப்படையில் தனக்கு பொருத்தமான மணமகளை கண்டுபிடித்துத் தருமாறு அளித்த புகாரால் பெரிதும் வைரலானார்.

தனது சகோதரனுடன் சேர்த்து அழகுசாதன பொருட்கள் விற்கும் கடையை வைத்து நடத்தும் மன்சூரிக்கு, இப்போது நாடு முழுவதும் இருந்து திருமண வரன்கள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தனது செலவுகளைச் சமாளிக்க போதுமான பணம் சம்பாதித்த போதிலும், தனது குறுகிய உயரம் காரணமாக பொருத்தமான பெண்ணைக் கண்டுபிடிக்கத் முடியாததால் அவர் காவல்துறையை அணுகியிருந்தார்.

தனது குறுகிய உயரம் காரணமாக பெண்களிடம் இருந்து நிராகரிப்பை எதிர்கொண்டிருந்த கைரானா நபர், இப்போது காசியாபாத், புலந்த்ஷாஹர், டெல்லி, பீகார் மற்றும் நாட்டில் உள்ள பிற நகரங்களில் இருந்தும் திருமண விண்ணப்பங்களை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஸிம் மன்சூரி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தனக்காக ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடி வந்துள்ளார். தனது உயரம் காரணமாக பல அவதூறுகள் மற்றும் அவமதிப்புகளை எதிர்கொண்டதால் 5ம் வகுப்பு படிக்கும்போதே பள்ளியை விட்டு விலகியுள்ளார்.

அஸீமுக்கு 21 வயதாகும்போது, அவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த அவரது பெற்றோர், அஸிமுக்கு ஏற்ற மணமகளைத் தேடத் தொடங்கினர். இருப்பினும், நிறைய வரன் தேடியும் அவரது உயரம் காரணமாக, அஸீமை அனைவரும் நிராகரித்ததாக கூறப்படுகிறது. அனைத்து நிராகரிப்புகளிலும் சோர்வடைந்த அஸிம், "என்னால் இரவில் தூங்க முடியவில்லை. நான் இவ்வளவு காலமாக முயற்சித்து வருகிறேன். என் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள எனக்கென ஒருவர் வேண்டாமா?" என்று வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

அஸிம் இது தொடர்பாக முதலில் உதவி கேட்க சென்றது காவல்துறை அதிகாரிகளிடம் அல்ல. முதலில், அவர் லக்னோவில் உள்ள உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிடம் தனக்கு உதவுமாறு கோரிக்கை வைத்திருந்தார். பின்னர் 2019ம் ஆண்டு, திருமணம் தொடர்பாக தனது குடும்பத்தினர் தனக்கு உதவவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து ஒரு போலீஸ் அதிகாரி ஒருவர் அஸிம் குடும்பத்தினருடன் பேசும் வீடியோ ஒன்று வைரலாகியது. அதில் அந்த அதிகாரி கூறியதாவது, "அவரைப் பாருங்கள், அவர் எவ்வளவு புத்திசாலித்தனமாக உடையணிந்துள்ளார்.

Also read... 72 வயதிலும் பளு தூக்கி உடலை கட்டுக்கோப்பாக வைத்து அசத்தும் மலேசிய பாடிபில்டிர்!

அவருக்கு திருமணம் செய்து வைப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?" என்று அஸிம் குடும்பத்தினரிடம் கேட்டுள்ளார். இருப்பினும் அவருக்கு வரன் அமைந்தபாடில்லை. எட்டு மாதங்களுக்கு முன்பு கூட, அவர் எஸ்.டி.எம் உதவியை நாடுவதற்காக கைரானா காவல் நிலையத்திற்குச் சென்றார். அதன்பிறகு, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதினார். முதல்வரிடமிருந்தோ அல்லது எஸ்.டி.எம்மிடமிருந்தோ எந்த பதிலும் கிடைக்காத நிலையில், அவர் மீண்டும் காவல்துறை அதிகாரிகளிடமே உதவியை நாடியுள்ளார். இதுதவிர, மன்சூரி தனது சமூக ஊடகக் கணக்கில் பொருத்தமான பெண் இருந்தால் அணுகுமாறு கோரிக்கை வைத்திருந்தார்.

கடைசியில், அவர் ஷம்லி கோட்வாலி பெண்கள் காவல் நிலையத்தை அடைந்து, தனது திருமணத்திற்கு உதவுமாறு இன்ஸ்பெக்டரைக் கேட்டுக்கொண்டார். அவரது தனித்துவமான வேண்டுகோளுடன் போலீஸை அணுகிய பின்னர், அவரது கதை சமூக ஊடகங்களில் வைரலாகியது. இந்த நிலையில் இப்பொது அஸீமுக்கு திருமண வரன்கள் கொட்டத் தொடங்கியுள்ளன. இதனால் அவர் சரியான துணையை தேர்ந்தெடுப்பதில் குழப்பமடைந்துள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்த வரங்களை பரிசீலித்து வருகின்றனர். இது தொடர்பாக விரைவில் நல்ல முடிவுகளை முன்னெடுப்பதாக கூறியுள்ளனர். மேலும், அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து ஏராளமான பெண்கள் தங்கள் வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: